Advertisment

மாவட்ட எஸ்.பி பங்களாவில் பறக்கும் காவிக்கொடி; அதிர்ச்சியில் சமூக ஆர்வலர்கள்!

Saffron flag flying at the district SP bungalow

கடந்த 2019 ஆம் ஆண்டு ராணிப்பேட்டை மாவட்டம் வேலூர் மாவட்டத்தில் இருந்து புதியதாக உருவாக்கப்பட்டது. இந்த மாவட்டத்திற்கான புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஓராண்டுக்கு முன்பு திமுக அரசால் கட்டி முடிக்கப்பட்டு முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட மாவட்டத்தின் உயர் அதிகாரிகள் தங்குவதற்கான பங்களாக்கள் இன்னும் கட்டப்படவில்லை. இதனால் இவர்கள் வெளியிடங்களில் தங்கி வருகின்றனர்.

Advertisment

ராணிப்பேட்டை மாவட்ட, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு ராணிப்பேட்டையில் உள்ள சிப்காட் பெல் நிறுவனத்திற்கு சொந்தமான அவ்வளாகத்தில் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கான தங்கும் விடுதியில் தான் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. இங்குதான் மாவட்ட எஸ்.பி.யும் தங்கி வருகின்றனர். மாவட்டத்திற்கு இதுவரை ஐந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் வந்து உள்ளனர். அவர்கள் யாரும் இதுவரை செய்யாததை தற்போது சில நாட்களுக்கு முன்பாக ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ள விவேகானந்தா சுக்லா செய்துள்ளார்.

Advertisment

அதாவது தான் தங்கியுள்ள பங்களாவில் இந்து அமைப்புகள் பயன்படுத்தும் ஆர்.எஸ்.எஸ் கிளை அமைப்பான வி.எச்.பி போன்றவை பயன்படுத்தும் ஆஞ்சநேயர் படம் போட்ட காவி கொடியை தனது வீட்டில் ஏற்றி வைத்துள்ளார். இதற்கு முன்பிருந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் யாரும் இது போல் செய்ததில்லை. இவர் தான் முதல் முறையாக காவி கொடியை தன் வீட்டு வாசலில் ஏற்றி வைத்து உள்ளார் என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தினர்.

அரசு ஊழியர்களுக்கு பணியிடத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த விதிமுறைகள் உள்ளது. அதிலும் குறிப்பாக ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உயர் அலுவலகங்களுக்கான விதிமுறைகள் என்பது மிகவும் தெளிவாக உள்ளது. அதையெல்லாம் தெரிந்தும் மாவட்டத்தின் உயர் அதிகாரி இப்படி இருக்கிறார் என கவலையை வெளிப்படுத்தியுள்ளனர் சமூக ஆர்வலர்கள்.

flag police ranipet
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe