Advertisment

ஆட்டிறைச்சிக்காக தம்பியைக் கொன்ற அண்ணன்... திருச்சியில் சோகம்!

sad incident in thiruchy

திருச்சி மாவட்டம் முசிறி அருகே வசித்து வரும் செல்லைய்யாஎன்பவருக்கு மூன்று மகன்கள். மூன்று பேரில் இரண்டாவது மகனான சிவக்குமார் சமைத்துச் சாப்பிடுவதற்காகஇறந்த ஆட்டை விலைகொடுத்து வீட்டுக்கு வாங்கி வந்துள்ளதாகத் தெரிகிறது. அப்பொழுது அங்கு வந்த சிவக்குமாரின்தம்பி ரவிக்குமார், இறந்துபோன ஆட்டை சமைத்துச் சாப்பிடுவது உடலுக்குத் தீங்கு தரும். உயிருடன் இருக்கும் ஆட்டை வாங்கி வந்திருக்கலாம். ஏன் இப்படிச் செய்தாய் என சிவக்குமாரிடம் சண்டையிட்டுள்ளார்.

Advertisment

sad incident in thiruchy

இந்தச் சண்டையானது இறுதியில் கைகலப்பாக மாற, அண்ணன் செல்வகுமார் தம்பி ரவிக்குமாரைகத்தியால் குத்திவிட்டு தலைமறைவானார். உடனடியாகரவிக்குமார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டநிலையில், போகும் வழியிலேயே உயிரிழந்தார்.இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள திருச்சி தாத்தையங்கார் பேட்டை காவல்துறையினர் தம்பியைக் கொன்ற அண்ணனைத் தேடிவருகின்றனர். ஆட்டிறைச்சிக்ககானவாய்த் தகராறில் தம்பியை அண்ணன் கத்தியால் குத்திக் கொன்றது அங்கு பரபரப்பையும், சோகத்தையும்ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

police incident thiruchy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe