/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/6_145.jpg)
செங்கல்பட்டு அருகே அனுமந்த புத்தேரி பகுதியைச் சேர்ந்தவர்கள் யுவராஜ்(27) - சுபாஷினி தம்பதியினர். இவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில், இவர்களுக்கு 6 மாதத்தில் குழந்தை ஒன்று உள்ளது.
இந்த நிலையில் இருசக்கர வாகன சர்வீஸ் சென்டரில் வேலை பார்த்து வந்த யுவராஜ் கடந்த ஒரு மாதமாக வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. அதனால் குடும்ப செலவிற்காக ஆன்லைன் செயலி மூலம் யுவராஜ் கடன் பெற்றுள்ளார். ஆனால் அவர் வேலைக்கு செல்லாததால், கடனை திருப்பி கட்ட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடன் கொடுத்த ஆன்லைன் நிறுவனம் பணத்தைக் கேட்டு யுவராஜை தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான யுவராஜ் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் யுவராஜின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow Us