Advertisment

கடன் கொடுத்தவர் குடும்பத்துடன் தற்கொலை; போலீசார் விசாரணை

A sad decision taken by the lender with the family; Police investigation

கொடுத்த கடன் திரும்பக் கிடைக்காது என நினைத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பைஏற்படுத்தியிருக்கிறது.

Advertisment

திருப்பூர் அணைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் நாகசுரேஷ்-விஜயலட்சுமி தம்பதி. இவர்கள்அணைக்காடு பகுதியில் டீக்கடை ஒன்றை நடத்தி வந்தனர். இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. நாக சுரேஷ் தன்னுடைய உறவினரான சூரியமூர்த்தி என்பவருக்கு ஐந்து லட்சம் ரூபாய் கடன் கொடுத்துள்ளார். கடனை வாங்கிய சூரியமூர்த்தி திடீரென தற்கொலை செய்து கொண்டார்.

Advertisment

கடன் வாங்கிய உறவினர் தற்கொலை செய்து கொண்டதால் தங்களுடைய பணம் திரும்ப வராது என நாகசுரேஷ் மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி என இருவரும் மன உளச்சலில் இருந்துள்ளனர். இந்நிலையில் கடிதம் ஒன்று எழுதி வைத்துவிட்டு கணவர் நாகசுரேஸ், மனைவி விஜயலட்சுமி, ஐந்து வயது மகள் என மூன்று பேரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சம்பவம் குறித்து அறிந்து அங்கு சென்று போலீசார் மூன்று பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்காது என நினைத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அணைக்காடு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் போலீசார் இந்த தற்கொலை குறித்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

Investigation police thirupur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe