Advertisment

அலைபாயுதே திரைப்பட பாணியில் காதல் திருமணம் செய்த ஜோடிகளுக்கு நேர்ந்த சோக முடிவு..!

lovers alaipayuthey

அலைபாயுதே திரைப்படம் பாணியில் காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டு அவரவர் வீட்டில் வாழ்ந்து வந்த ஜோடிகளுக்கு நேர்ந்த சோகமான முடிவு நம்மை கண்ணீர் விட செய்தது.

Advertisment

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சுந்தரபெருமாள் கோயில் பகுதியை சேர்ந்தவர் புகழேந்தி. 26 வயதான இவர் மெக்கானிக் வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டிற்கு நேர் எதிர் வீட்டை சேர்ந்தவர் அனுஷியா பி.டெக் படித்து விட்டு வீட்டில் இருந்துவருகிறார். எதிர் எதிர் வீட்டில் இருந்த இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டு கடந்த 2015ஆம் ஆண்டு திருவிடைமருதூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதையடுத்து, இருவரும் சேர்ந்து வாழாமல் அலைபாயுதே திரைப்பட பாணியில் அவரவர் வீட்டில் தனித் தனியாக இருந்து கொண்டு கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர்.

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

இந்தநிலையில் அனுசியாவின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்க மாப்பிள்ளை பார்க்க துவங்கினர். இதனால், செய்வதறியாமல் திணறிய புகழேந்தி கிராமத் தலைவர்களிடம் தனக்கும் அனுசியாவுக்கும் திருமணம் நடந்து விட்டதாக கூறி ஆதாரத்தை நீட்டினர். இரு தரப்புக்குமான பேச்சுவார்த்தை கிராமத்தில் முடிவுக்கு வரவில்லை. பிரச்சனை சுவாமிமலை காவல் நிலையத்திற்கு சென்றது. அங்கு நடந்த விசாரனையில் இருவரும் மேஜர் அனுசயாவை அவரது கனவரோடு அனுப்பிவிடுங்க எனக் கூறி அனுப்பினர் காக்கிகள்.

இதனால், அனுசியாவின் பெற்றோர் எங்களது மகள் செத்தாலும் சாவாள், அவனோட போக மாட்டாள் எனக்கூறி விட்டு சென்றார்கள். ஆனால், அவர்கள் செல்வதற்குள் அனுசியா தற்கொலை செய்து உயிரிழந்து கிடந்தார். இதைக்கண்டு, ஆத்திரமடைந்த அனுசியாவின் குடும்பத்தினர், புகழேந்தியின் வீடு, அவரது உறவினர்களின் வீடுகளுக்கு தீ வைத்து கொளுத்தினர். அதோடு, புகழேந்தியின் உறவினரை தாக்கினர். பலத்த காயமடைந்த 3 பேர் குடந்தை மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

lovers alaipayuthey
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe