(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக கேராளாவில் 22 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக சுகாதாரத்துறை சார்பில் கேரளாவிற்குச்செல்வதைத்தவிர்க்குமாறுஅறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, கேரளாவில் உள்ள சபரிமலை கோவிலுக்கு விரதம் இருந்துஇருமுடிகட்டிச் செல்லும் ஐய்யப்ப பக்தர்கள் கரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் உள்ள ஐய்யப்பன் கோவில்களுக்குச் சென்று தங்கள் வேண்டுதலை முடித்துக் கொள்கின்றனர். நேற்று முன்தினம் (14.03.2020) சபரிமலைக்குச் செல்லவேண்டிய பக்தர்கள் சென்னை, ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஐய்யப்பன் கோவிலுக்கு இருமுடியுடன் வந்து, பதினெட்டு படியேறி சுவாமி தரிசனம் செய்தனர்.