k

Advertisment

சபாிமலைக்கு செல்ல முயன்ற 40 வயது பெண் வீடு திரும்பாததால் கணவா் போலிசில் புகாா் கொடுத்துள்ளாா்.

கேரளா மலப்புரம் அங்காடிபுரத்தை சோ்ந்த கனகதுா்க்கா(40), கோழிக்கோடு பிந்து(42) வும் சோ்ந்து கடந்த 24-ம் தேதி அதிகாலையில் பம்பையில் இருந்து சபாிமலைக்கு செல்ல முயன்றனா். போலிசாா் அவா்கள் இருவரையும் இரண்டு கி.மீ தூரம் சந்திரநந்தன் வழி வரை பாதுகாப்புடன் அழைத்து சென்றனா். அதை தாண்டி பக்தா்கள் அவா்களை அனுமதிக்காததால் திரும்பி வந்தனா். அப்போது கனகதுா்க்காவுக்கு திடீரென்று சுவாச கோளாறு ஏற்பட்டதால் போலிசாா் அவரை அங்கிருந்து டோலி மூலம் பம்பைக்கு அழைத்து வந்து பின்னா் ஆம்புலன்ஸ் மூலம் கோட்டயம் அரசு மருத்துவ கல்லூாி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

பின்னா் ஒரு நாள் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து அனுப்பப்பட்ட கனக துா்க்கா இதுவரை வீடு திரும்பாததால் அவரது சகோதரா் பரத்பூசன் கோட்டயம் மருத்துவகல்லூாி மருத்துவனை வந்து விசாாித்துவிட்டு பின்னா் இந்து அமைப்பினா் மீது சந்தேகத்துடன் கோட்டயம் போலிசில் புகாா் கொடுத்தாா்.

Advertisment

இதே போல் கனகதுா்காவின் கணவா் கிருஷ்ணன் உண்ணியும் பெருந்த மண்ணல் போலிசில் இந்து அமைப்பினா் மீது சந்தேகத்துடன் புகாா் கொடுத்துள்ளாா்.

இடதுசாாி சிந்தனை கொண்ட கனகதுா்க்கா பல கதைகள் கட்டுரைகளை எழுதியுள்ளாா். டி.ஓய்.எப்.ஐ- யில் முழுநேர ஊழியராக இருந்த அவா் பெருந்தன்காடு சிவில் சப்ளை அலுவலராக வேலை பாா்த்து வருகிறாா். 21-ம் தேதி வீட்டில் இருந்து கிளம்பிய கனகதுா்க்கா மஞ்சோியில் சகோதாி ராஜலெட்சுமியின் வீட்டில் தனது இரண்டு குழந்தைகளையும் விட்டு விட்டு 24-ம் தேதி சபாிமலை செல்வதற்காக பம்பை வந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.