Advertisment

மறைக்கப்படும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை குற்றங்கள்! -அச்சத்தை விலக்கி அபாயச் சங்கு ஊதுங்கள்!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா – மேலசிறுகுளத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர், தன் மனைவி, மகன் மற்றும் மகள்களுடன் ஊரைவிட்டே சென்றுவிட்டார். அதுபோல், அதே கிராமத்தைச் சேர்ந்த கொத்தனாரும் குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார்.

Advertisment

கூலித்தொழிலாளியின் மகளான சிறுமியை, கொத்தனார் பாலியல் தொந்தரவு செய்து, விவகாரம் மொத்த கிராமத்துக்கும் தெரிந்துவிட, இரு குடும்பங்களும் சொந்த கிராமத்தை விட்டுச் சென்றுவிட்டன.

ERE

கூலித்தொழிலாளியின் மனைவி தீப்பெட்டி ஆலையில் வேலை பார்ப்பவர். இவர், தன் மகளுக்குத் தொந்தரவு தந்த கொத்தனார் குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்தால், வழக்கு, விசாரணை, கைது என நடந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துவிடும் என்று அஞ்சி, ஊர்ப் பெரியவர்களிடம் முறையிட்டுள்ளார். அவர்கள், மெஜாரிட்டி சமூகம் என்ற அடிப்படையில், “இதையெல்லாம் ஏம்மா பெரிசுபடுத்துற?” என்று கொத்தனாருக்கு ஆதரவாக நடந்திருக்கின்றனர்.

Advertisment

ஊராரின்சமூகஆதரவுப் போக்கால் நொந்துபோன அச்சிறுமியின் குடும்பம், ஊருக்குள் இருப்பதை அவமானமாகக் கருதி வெளியேறியது. பாலியல் தொந்தரவு அளித்த கொத்தனாரின் குடும்பத்தினரும், ஒரு குடும்பம் ஊரைவிட்டுச் சென்றதற்கு காரணமாகிவிட்டோமே? ஊர் கேவலமாகப் பார்க்குமே! என்று வெளியில் தலைகாட்ட பயந்து, ஊரைக் காலி செய்துவிட்டது.

புகார் எதுவும் வராததால், தங்கள் லிமிட்டில் நடந்த இந்த விவகாரத்தை அறியாமலே, கடமையாற்றி வருகிறது அப்பையநாயக்கன்பட்டி காவல் நிலையம்.

RTR

இதே விருதுநகர் மாவட்டத்திலுள்ள வத்திராயிருப்பு ஒன்றியத்தில் உள்ளது ரங்கபாளையம். இந்த கிராமம் மேலசிறுகுளம் போல் நடந்து கொள்ளவில்லை. அரசு ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் சிறுவன் ஒருவனுக்கும், சிறுமிகள் இருவருக்கும், தொடர்ந்து தொந்தரவு அளித்துவந்த, வெள்ளைச்சாமி, திருவன், இரணியவீரன், கணேசன், ராதாகிருஷ்ணன் ஆகிய 5 பேர் மீதும் போக்சோ சட்டத்தைப் பாயச் செய்து கம்பி எண்ண வைத்துவிட்டது.

பெண் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கவலையால்தான், பாலியல் குற்றங்கள் பலவும் பெற்றோரால் மறைக்கப்படுகின்றன. இதனால், வழக்கிலிருந்தும் தண்டனையிலிருந்தும் கொடியவர்கள் தப்பிவிடுகின்றனர். தொடர்ந்து இதே குற்றச் செயலில் ஈடுபடுகின்றனர். பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் காட்டும் அச்சம், ஒட்டு மொத்த சமுதாயத்தையும் அபாயத்துக்குள் சிக்க வைப்பதாக உள்ளது.

police sathur viruthunagar Sexual Abuse
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe