புதிய கல்வி கொள்கை குறித்துநடிகர் சூர்யா கூறிய கருத்துக்கு ஆதரவாக மக்களவையில் பேசிய மதுரை நாடாளுமன்றஉறுப்பினர்சு.வெங்கடேசன் தொடர்ந்து பேசுகையில்,
புதிய கல்வி கொள்கை மீது மக்கள் கருத்து கூறலாம் என மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால் நடிகர் சூர்யா கருத்து கூறியதற்கு பாஜக தலைவர்கள் கண்டனங்கள் தெரிவிக்கிறார்கள். புதிய கல்வி கொள்கை மீது கருத்து கூறலாம் என அரசு சொல்லிய நிலையில் பாஜகவினர் எதிர்ப்பது ஏன்?. கல்விக் கொள்கையை ஆதரிக்க வேண்டுமென ஆளும் கட்சியினர் கட்டாயப்படுத்துகிறார்கள். கல்விக் கொள்கை பற்றி கருத்து கூற வேண்டுமா? வேண்டாமா? என அரசு தெளிவுபடுத்த வேண்டும் என பேசினார். மேலும்புதிய கல்விக் கொள்கை குறித்து கருத்து கூறிய சூர்யாவும் அவரை ஆதரித்து பேசிய ரஜினியும் மிரட்டப்படுகிறார்கள் எனவும் அவர் கூறினார்.