S. P. Pradeep said college student had filed a false complaint due to stress

Advertisment

தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையத்தைச் சேர்ந்த தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒரு காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்று தெரிவித்திருந்தார்.

அந்த புகாரில், கல்லூரி கல்லூரி செல்வதற்காக பேருந்து மூலம் தேனி பழைய பேருந்து நிலையம் வந்து இறங்கி அருகிலிருந்த கழிவறைக்குச் சென்ற போது அடையாளம் தெரியாத நபர்கள் தன்னை இன்னோ வா காரில் கடத்தி தன்னை பாலிய ல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், பின்னர் தன்னை திண்டுக்கல் ரயில்வே நிலையத்தில் இறக்கி விட்டதாகவும் கூறியுள்ளார். மேலும், ரயில்வே நிலையத்தில் இருந்து ஆட்டோ மூலம் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், மாணவியின் புகாரினை பெற்று திண்டுக் கல் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத் துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisment

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப், “உத்தம்பாளையத்தை சேர்ந்த தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி கூறியது போல் எந்தவொரு கடத்தல் மற்றும் கற்பழிப்பு சம்பவங்களும் நடைபெறவில்லை வேண்டும் என்று அந்த மாணவி மனஅழுத்தம் காரணமாக தவறான புகார் அளித்துள்ளார் என்பதும் விசாரணைகள் தெரிய வருகிறது இருந்தாலும் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறோம்” என்று கூறினார்.