Advertisment

அதிர்ச்சி அளிக்கிறது... எஸ்.பி.பி மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்!

rajini

Advertisment

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன், 25.09.2020 வெள்ளிக்கிழமை பிற்பகல் காலமானார். அவருடைய மறைவுக்குத் திரையுலகினர், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள வீடியோவில், 'இன்னைக்கு ரொம்ப சோகமான நாள். கடைசி நிமிஷம் வரைக்கும் உயிருக்காக போராடி, மதிப்பிற்குரிய எஸ்.பி.பிஅவர்கள் நம்மை விட்டுப் பிரிந்திருக்கிறார். அவருடைய பிரிவு மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. எஸ்.பி.பிஅவர்களுடைய பாட்டுக்கும் குரலுக்கும் ரசிகர்களாக இல்லாதவர்கள் இந்தியாவில் இல்லை.

எஸ்.பி.பி.யின் பாடலையும், குரலையும் விட அவரது மனித நேயத்தை அனைவரும் நேசித்தார்கள். சின்னவங்க, பெரியவங்க என எல்லோரையும் மதித்தார். அன்பு கொடுத்தார். இந்திய திரையுலகம் எத்தனையோ பெரிய பாடகர்களை உருவாக்கியிருக்கிறது. அவர்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு நம்முடைய எஸ்.பி.பி.க்கு இருக்கிறது. அவர்கள் எல்லோருமே குறிப்பிட்ட மொழியில்தான் பாடினார்கள். ஆனால் எஸ்.பி.பிபல மொழிகளில் பாடியுள்ளார். அவரது இனிமையான, கம்பீரமான குரல் நூற்றாண்டுக்கும் மேல் ஒலித்துக்கொண்டே இருக்கும். எனினும், அவர் இன்று நம்முடன் இல்லை என்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்' என்று தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.

rajini spb
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe