Russian consulate siege

Advertisment

கடந்த ஒரு வாரகாலமாக சிரியாவில் நடைபெற்று வரும் இன அழிப்பை கண்டித்து, மனிதநேய ஜனநாயக கட்சியினர் சென்னையிலுள்ள ரஷ்ய துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை இன்று 03.03.2018 மாலை நடத்தினர்.

இப்போராட்டத்தில், சிரியாவில் ரஷ்ய அரசின் துணையோடு அப்பாவி பொதுமக்களின் மீது குண்டுகளை வீசி, குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்களை கொன்றொழிக்கும் சிரியா அரசைக் கண்டித்தும், ஆயுதங்கள் வழங்கி கொலைக்கு உதவி வரும் ரஷ்ய அரசை கண்டித்தும்,

“வெளியேறு ! வெளியேறு !!

ரஷ்யா இராணுவமே சிரியாவை விட்டு வெளியேறு !!

தலையிடு ! தலையிடு !!

ஐ.நா சபையே தலையிடு !!

சிரியா அரசே கொடுங்கோல் அரசே !!

கொல்லாதே ! கொல்லாதே !!

இந்திய அரசே ! சிரியா விஷயத்தில்

வாய்மூடி மெளனிக்காதே !!

போன்ற கோஷங்களை எழுப்பினர்.

இம் முற்றுகையில் பங்கேற்ற பொதுமக்கள் ஆவேசத்தில் ரஷ்ய கொடிகளை எறிந்தனர், அங்கு கூட்டம் ஆர்ப்ரிப்புடன் தூதுரக்கத்தை நோக்கி முன்னேறியதும் போலீஸ்சாருக்கும், பொது மக்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

Advertisment

பிறகு மஜக தலைமை நிர்வாகிகள் கூட்டத்தை அமைதிபடுத்தி, வரிசையாக கைதாகுமாறு கேட்டுக்கொன்டனர். இதனால் அப்பகுதியில் சிறுது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்த முற்றுகை போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று கைதாகினர்.