Advertisment

துப்பாக்கியுடன் புகுந்து வங்கிக்குள் ரகளை... சாமியார் கைது!

Rushed into the bank with a gun... preacher arrested!

திருவாரூரில் கையில் துப்பாக்கியுடன் வங்கிக்குள் நுழைந்து ரகளையில்ஈடுபட்ட சாமியார் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisment

திருவாரூர் மாவட்டம் குடவாசலை சேர்ந்தவர் திருமலை சாமிகள் எனும் சாமியார். இவர் 'இடி மின்னல் சங்கமம்' என்ற அமைப்பு ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று மாலை திருவாரூர் மஞ்சக்குடி சியுபி கிளைக்குள் துப்பாக்கியுடன் புகுந்த சாமியார் ரகளையில் ஈடுபட்டதோடு வங்கிக்குள்ளேயே புகை பிடித்துள்ளார். மேலும் அங்கிருந்த வங்கி ஊழியர்களை மிரட்டி உள்ளார். இதுதொடர்பாக போலீசாருக்கு புகார் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரகளையில் ஈடுபட்ட சாமியாரை கைது செய்துள்ளனர்.

Advertisment

சம்பந்தப்பட்ட சாமியாரின் இரண்டாவது மகள் சீனாவில் மருத்துவம் பயின்று வரும் நிலையில் மாணவியின் படிப்பிற்காக கல்வி கடன் வேண்டும் எனக் கூறி சியுபி கிளைக்கு சாமியார் சென்றுள்ளார். ஒரு வார காலத்திற்குள் ஜாமீன் கையெழுத்து வேண்டும் என சாமியாரிடம் வங்கி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்இன்றுமாலை மீண்டும் வாங்கிக்கு துப்பாக்கியுடன் சாமியார் புகுந்து ரகளை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

police saint Thiruvarur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe