திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சி தலைவர்கள், துணைத்தலைவர்களுக்கான ஊராட்சி நிர்வாகம் தொடர்பான ஒருநாள் பயிற்சி வகுப்பு ஜனவரி 22,23,24 ஆகிய தேதிகளில் காந்திகிராமம் கே.வி.கே.அரங்கத்தில் நடைபெற்றது.

Advertisment

மாவட்ட ஆட்சித்தலைவர் மு.விஜயலட்சுமி தலைமை தாங்கி பயிற்சி வகுப்பை துவக்கி வைத்தார். திட்ட இயக்குநர் கவிதா, மாவட்ட ஊராட்சி செயலாளர் அகமது ஆகியோர் கலந்துகொண்டு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணை தலைவர்களுக்கு பயிற்சி அளித்தனர். நிறைவுநாள் விழாவிற்கு ஊராட்சிகளின் உதவி இயக்குநர் கங்காதரணி தலைமை தாங்கினார்.

Rural panchayats have the potential to make India great - Gangadharani

திண்டுக்கல் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் மற்றும் பயிற்சியாளர்களும், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுமான வீரக்கடம்பு கோபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை உரையாற்றிய ஊராட்சிகளின் உதவி இயக்குநர் கங்காதரணி திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.விஜயலெட்சுமி தலைமையில் கிராம ஊராட்சிகளுக்கு செய்ய வேண்டிய நலத்திட்ட உதவிகளை செய்து உங்களிடம் நாங்கள் ஒப்படைத்துள்ளோம். அதை நீங்கள் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இந்தியா வல்லரசு ஆகவேண்டும் என மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கனவு கண்டார். அந்த கனவை நிறைவேற்றும் பொறுப்பில் நீங்கள் உள்ளீர்கள்.

Advertisment

இந்தியா வல்லரசு ஆவதை கிராமங்களில் இருந்து தொடங்குங்கள். வெற்றி பெற்று தலைவர் மற்றும் துணை தலைவர் பதவியில் அமர்ந்துள்ள நீங்கள் சாதி, மத, இன வேறுபாடின்றி நலத்திட்ட உதவிகளை உங்கள் ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்களுக்கு வழங்குங்கள் என்றார். மத்திய மாநில அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை 100 சதவீதம் பெற்று உங்கள் ஊராட்சி மேம்பட சிறப்பாக பணியாற்றுங்கள் என வேண்டுகோள் விடுத்தார்.

Rural panchayats have the potential to make India great - Gangadharani

ஊராட்சி சம்மந்தமான குறைகளை எந்த நேரத்திலும் தனது செல்போன் நம்பருக்கு அழைத்து நீங்கள் புகார் செய்யலாம் எனக்கூறி தனது செல்போன் நம்பரை ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு வழங்கினார். பயிற்சி வகுப்பில் தொப்பம்பட்டி ஒன்றியம் கொத்தையம் ஊராட்சியை சேர்ந்த துணைதலைவர் குப்பாத்தாள் (வயது 81) பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. பயிற்சி வகுப்பில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகராஜன், சாந்தா, மகேந்திரன் மற்றும் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (திட்டம்) வீரகடம்புகோபு, தொப்பம்பட்டி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) பிரபுபாண்டி ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

Advertisment

பயிற்சி வகுப்பிற்கான ஏற்பாடுகளை ஊராட்சிகளின் உதவி இயக்குநர் அலுவலக கண்காணிப்பாளர் ரவீந்தரன், கணக்காளர் கமலக்கண்ணன் மற்றும் அலுவலக பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர். பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட அனைவருக்கும் மதிய உணவு மற்றும் மாலையில் சிற்றுண்டி சிறப்பான முறையில் வழங்கப்பட்டது.