Advertisment

ஊரக உள்ளாட்சி தேர்தல்... திமுக ஆலோசனை கூட்டம் (படங்கள்)

புதியதாகஅறிவிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித்தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. www.tnsec.tn.nic.in என்ற மாநில தேர்தல் ஆணைய இணையதளத்தில் வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. ஊரக உள்ளாட்சித்தேர்தல் நடக்கவிருக்கும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களைச் சேர்ந்த வாக்காளர்கள் தங்கள் பெயர், வார்டு உள்ளிட்ட விவரங்களை அந்த இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை அதிமுக தலைமைநேற்றுமாலை அறிவித்திருந்தது.அதேபோல்ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை இன்று நடத்தப்படும் என திமுக தலைமை நேற்று அறிவித்திருந்தது. அதன்படி தற்பொழுது காஞ்சிபுரம், வேலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மாவட்ட செயலாளர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

Advertisment

meetings local election
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe