Rural local elections ... Public holiday announcement!

Advertisment

தமிழ்நாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் தமிழ்நாடு தேர்தல் ஆணையம், விடுபட்ட மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாகத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிந்துள்ள நிலையில் தேர்தல் பரப்புரையைத் தொடங்க அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள பகுதிகளுக்கு மட்டும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அறிவித்துள்ளது. தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் 6,9 ஆகிய தேதி உள்ளாட்சித்தேர்தல் நடைபெற உள்ள இடங்களில் மட்டும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.