Rural Local Election ... AIADMK Candidates List Released!

தமிழ்நாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களைத் தவிர மற்றமாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.இந்நிலையில், சில தினங்களுக்கு முன் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாகத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கிடையே, இந்த ஒன்பது மாவட்டங்களிலும் வேட்புமனு தாக்கல் 15.09.2021 அன்று துவங்கியது.

Advertisment

உள்ளாட்சித்தேர்தல் தொடர்பாக அதிமுக-பாஜக இடையே நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதிமுக தரப்பில் தங்கமணி, நத்தம் விஸ்வநாதன். பாஜக தரப்பில் கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்நிலையில் தற்பொழுது அதிமுக தலைமை, உள்ளாட்சித்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11 இடங்களுக்கும், செங்கல்பட்டில் 14 இடங்களுக்கும், ராணிப்பேட்டை-9, விழுப்புரம்-24, தென்காசி-12 என மாவட்ட ஊராட்சி வேட்பாளர்களுக்கான பட்டியலை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது.