Advertisment

முதலிரவுக்கு செல்வதை தடுத்த தந்தை - சிறையில் புதுமாப்பிள்ளை 

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (48). இவரது மகன் இளமதி (23) என்பவருக்கு கடந்த 14ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமண செலவுக்காக சிலரிடம் கைமாத்தாக பணம் வாங்கியிருந்ததால், அதனை ஓரிரு நாளில் திரும்பத்தர வேண்டும் என்பதற்காக திருமணம் நடந்த இரவே திருமண செலவு எவ்வளவு ஆனது. மொய் வரவு எவ்வளவு என்பது குறித்து கணக்கு பார்த்துள்ளார் சண்முகம். அதற்கு துணையாக மகன் இளமதியையும் உடன் வைத்து கணக்கு எழுத வைத்துள்ளார்.

Advertisment

Rupee

அப்போது இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் காலையில் பார்த்துக்கொள்ளலாம் எனக்கூறிவிட்டு இளமதி முதலிரவு அறைக்கு சென்றுவிட்டார். இதனால் தந்தை சண்முகம் கோபமடைந்து வெளியில் கிடந்த கட்டையை எடுத்துவந்து கணக்கை முடித்து விட்டு உள்ளே போ எனக்கூறி மகனை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த இளமதி, தந்தை வைத்திருந்த கட்டையை பறித்து திருப்பி தாக்கி தள்ளி விட்டதில் சண்முகம் கீழே விழுந்து மயங்கியதாக கூறப்படுகிறது. உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து பார்த்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டார் எனக்கூறி சென்றனர்.

Advertisment

இதுகுறித்து சண்முகத்தின் தம்பி அண்ணாதுரை உடையார்பாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிந்து இளமதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Difference father marriage Opinion rupees son
இதையும் படியுங்கள்
Subscribe