Skip to main content

“வதந்தி பரப்புபவர்களை கண்காணிக்க வேண்டும்” - காவலர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

Published on 18/10/2023 | Edited on 18/10/2023

 

Rumor spreaders should be monitored Chief Minister instructs constables

 

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர், மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனத்தின் கூட்டரங்கில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நேற்று (17.10.2023) கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களின் காவல்துறை உயர் அலுவலர்களுடன் சட்டம் ஒழுங்கு தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

 

இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “எங்கள் மாவட்டத்தில் போதைப் பொருள் நடமாட்டம் இல்லை என்று ஒவ்வொரு மாவட்ட எஸ்.பி.யும் உறுதி எடுத்து தடுத்துக் காட்ட வேண்டும். ஏனென்றால், இது உங்களது வேலை மட்டுமல்ல. உங்களுடைய கடமை. அடுத்து தமிழ்நாட்டில் அதிகப்படியான உயிரிழப்புகள் சாலை விபத்துகளினால் ஏற்படுகின்றன என்பதை அறியும்போது, எனக்கு மிகுந்த வேதனையும், வருத்தமும் ஏற்படுகிறது. அரசு சார்பில் விபத்துகளைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், பயணம் செய்வோரின் செயல்பாடு இதில் மிக இன்றியமையாதது. எனவே. பொது மக்களிடையே தொடர்ந்து சாலை விபத்துகள் குறித்த விழிப்புணர்வை காவல்துறையினர் ஏற்படுத்திட வேண்டும். பிற துறையினருடன் இணைந்து, சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

 

குறிப்பாக, இந்த மூன்று மாவட்டங்களில் வாகன போக்குவரத்து மிக அதிகம் என்பதால். சாலை மேம்பாடு, சமிக்ஞைகள் அமைத்தல், தெரு விளக்குகள் அமைத்தல் போன்ற பணிகளையும் மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை பொறுத்தவரை, அவ்வகையான குற்றங்களைத் தடுப்பதற்கும், குறைப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். குறிப்பாக, பாலியல் துன்புறுத்தல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல், குற்றவாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெற்றுத்தருதல், சிறப்பு நீதிமன்றங்கள் உருவாக்குதல், போக்சோ வழக்குகளைத் தீவிரமாக கண்காணித்து, குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்று தரும் வரை தொடர் கண்காணிப்பு போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் நீங்கள் அனைவரும் நேரடியாக கவனம் செலுத்த வேண்டும். அதேபோல், சமூக வலைத்தளங்களின் மூலம் வன்முறை மற்றும் சாதிய கருத்துகளையும், வதந்திகளைப் பரப்புபவர்களையும் கண்காணிக்க வேண்டும். பொய்யான செய்திகள் குறித்து பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

 

Rumor spreaders should be monitored Chief Minister instructs constables

 

இக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, உள்துறை முதன்மைச் செயலாளர்  பெ.அமுதா, காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், காவல்துறை சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் இயக்குநர் ஆ. அருண், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர. ராகுல்நாத், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் த. பிரபு சங்கர், ஆவடி மாநகர காவல் ஆணையர் கி. சங்கர்,  தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அ.அமல்ராஜ், காவல்துறை தலைவர் ந. கண்ணன், காவல்துறை துணைத் தலைவர் இரா. பொன்னி, செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.வி. சாய் பிரணீத், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ம. சுதாகர், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாகெர்ல சிபாஸ் கல்யாண், காவல்துறை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

குளவி கொட்டியதில் ஒருவர் உயிரிழப்பு; பீதியில் பொதுமக்கள்!

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
One person passed away in a wasp sting near Chengalpattu.

செங்கல்பட்டு மாவட்டம் புலியூர் பஞ்சாயத்து அச்சரவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வீரராகவன் என்ற முதியவர். இந்த நிலையில், அச்சரவாக்கம் கிராமத்தில் உள்ள காட்டுப் பகுதியில் விறகு எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது, குளவி ஒன்று வீரராகவனை கொட்டியுள்ளது. இதனால் பதறிப்போன வீரராகவனை அப்பகுதியினர் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிக்கிச்சைகாக அனுமதித்தனர். ஆனால் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் வீரராகவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இந்த நிலையில் வீரராகவன் குளவி கொட்டி இறந்ததை அறிந்த புலியூர் ஊராட்சி மக்கள் அந்தப் பகுதியில் 100 நாள் வேலை செய்வதற்கு அச்சமடைந்துள்ளனர். அந்தப் பகுதியில் பல்வேறு இடங்களில் குளவிகள் கூடுகள் கட்டப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அந்தப் பகுதியில் செல்வதற்கு மச்சம் அடைகின்றனர். குறிப்பாக 100 நாள் வேலை செய்வதற்கு பெண்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது. மேலும் இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

'முதல்வர் விசாரிக்க வேண்டும்' - பெண் தற்கொலையில் சிக்கிய பரபரப்பு கடிதம்

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
'chiefminister should investigate'-a letter from a woman involved  incident

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் ஐஏஎஸ் அதிகாரியின் முன்னாள் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்கொலை செய்துகொண்ட பெண் எழுதிய கடிதம் போலீசார் வசம் சிக்கியுள்ளது.

மதுரை மாவட்டம் எஸ்.எஸ் காலனி, விவேகானந்தர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மைதிலி ராஜேந்திரன். இவருடைய 14 வயது மகன் மர்ம கும்பலால் கடத்தப்பட்டார். கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் இரண்டு கோடி ரூபாய் கொடுத்தால் தான் சிறுவனை விடுவோம். இல்லையெனில் கண்டம் துண்டமாக வெட்டி கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விட்டனர்.

உடனடியாக இது குறித்து காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. எஸ்.எஸ் காலனி காவல் துறையினர் நடத்திய தீவிர விசாரணையின் அடிப்படையில் பணி நீக்கம் செய்யப்பட்ட காவலர் செந்தில்குமார், ரவுடி அப்துல் காதர், காளிராஜ், வீரமணி ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் இந்த கடத்தல் நடைபெற்றது தெரியவந்தது. மேலும் இந்த சம்பவத்தை நிகழ்த்திய முக்கிய நபர்களான ஹைகோர்ட் மகாராஜன் மற்றும் சூர்யா என்ற ஐஏஎஸ் அதிகாரியின் முன்னாள் மனைவியையும் போலீசார் தேடி வந்தனர்.

இருவரும் போலீஸ் பிடியில் சிக்காமல் இருக்க தப்பி பெங்களூரில் பதுங்கி வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து பெங்களூரிலிருந்து குஜராத் சென்ற நிலையில் சூர்யா குஜராத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவர்களுடைய பெற்றோர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சூர்யாவின் மரணம் குறித்து விசாரிக்கத் தனிப்படை போலீசார்  குஜராத் விரைந்தனர்.

குஜராத் காந்திநகர் பகுதியில் ஆட்சியர் குடியிருப்பு வளாகத்தில் தோட்டப் பகுதியில் விஷம் அருந்தி சூர்யா தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் சூர்யா தற்கொலை குறித்து எழுதி வைத்துள்ள கடிதம் வெளியாகியுள்ளது. அதில், 'பள்ளி மாணவன் கடத்தல் சம்பவத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. மேலும் தன் மீது மைதிலி ராஜலட்சுமி பொய்யான புகாரை கொடுத்திருக்கிறார். தனது கணவருக்கு இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே இது குறித்து முதல்வர் மற்றும் உதயநிதி ஸ்டாலின் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.