Advertisment

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு கடுமையான நிபந்தனைகள் விதிப்பு

RSS Strict conditions imposed on the rally

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்துவதற்கு கடுமையான நிபந்தனைகள் விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Advertisment

இது குறித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வெளியிட்டுள்ள உத்தரவில், மதுரை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களை தவிர்த்து திருச்சி, புதுக்கோட்டை, தென்காசி மற்றும் நெல்லை உட்பட 16மாவட்டங்களில் மட்டும் கடுமையான நிபந்தனைகளுடன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பேரணி செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

Advertisment

மேலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருப்பதை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உறுதி செய்ய வேண்டும். 500 நபர்களுக்கு மேல் பேரணி செல்ல கூடாது. பேரணியின்போது, தனிமனிதர்கள், சாதி, மதம் சார்ந்து பேசவோ, பாடல்கள் பாடவோ கூடாது. பேரணியில் பட்டாசு வெடிக்க கூடாது போன்ற கடுமையான நிபந்தனைகளை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

rally
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe