Advertisment

குன்னூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம்!

நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தில் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Advertisment

 RSS procession held in Cuunoor!

நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் இருந்து துவங்கிய ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை குப்புராஜ் மற்றும் சரஸ்வதி சாமி ஜி அவர்கள் மலர்கள் தூவி துவக்கி வைத்தனர். குன்னூர் சிம்ஸ் பூங்காவில் இருந்து துவங்கிய இந்த ஊர்வலம் பெட்போர்டு, ஓய்.எம்.சி.ஏ, மவுண்ட் ரோடு வழியாக வி.பி தெருவில் உள்ள பொது மேடையை வந்தடைந்தது. அங்கு ஆர்.எஸ்.எஸ் மாநில துணை செயலாளர் சுப்ரமணியம், மாவட்ட தலைவர் க.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 400 க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் கலந்து கொண்ட பொது கூட்டம் நடைபெற்றது.

Advertisment

இதில் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடந்ததை தொடர்ந்து 2 காவல் துணை கண்கணிப்பாளர்கள், 4 ஆய்வாளர்கள், 20 துணை ஆய்வாளர்கள் உள்ளிட்ட 250 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Kunnur police Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe