சுதந்திரப் போராட்டத்துக்கும் பாஜக தலைவர்களுக்குமோ எந்த சம்பந்தமும் இல்லை. பாஜகவின் தலைமையிடமான ஆர்எஸ்எஸ் தலைவர்களுக்கு சுதந்திரப் போராட்டத்தை காட்டிக் கொடுத்த வரலாறும், வெள்ளையர்களிடம் மன்னிப்பு கேட்ட வரலாறும் உண்டு.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/all_3.jpg)
நாடு விடுதலை அடைந்தபோதிருந்து அரசாங்க செயல்பாடுகளையும், அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும், சாமானியர்கள் கேள்வி கேட்க வழியே இல்லாமல் இருந்தது. அவர்களிடம் இருந்த ஒரே உரிமை வாக்குரிமை மட்டும்தான்.
அரசாங்கத்தின் செயல்பாடுகளை சாமானியர்களும் கேள்வி கேட்கும் வகையில் 2005 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை கொண்டுவந்தது. இதை இரண்டாவது சுதந்திரம் என்று கொண்டாடினார்கள். ஆனால், அந்தச் சுதந்திரம் முதல் ஐந்தாண்டு மோடியின் ஆட்சியை கிழித்தெறிய பெரிய அளவில் காரணமாக இருந்தது. மோடியைப் பற்றி மட்டுமல்லாமல், பாஜக அரசுகளின் பல மோசடிகளை அந்தச் சட்டம் அம்பலப்படுத்தியது. படிப்பு விஷயத்தில்கூட மோடி நடத்திய மோசடியும் அம்பலமாகி கேலிக்கு ஆளாக்கியது.
மோடியின் பொய்கள் அனைத்தும் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டன. அப்போதே மோடி திட்டமிட்டிருக்க வேண்டும். இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்தால் முதலில் பல்லை பிடுங்க வேண்டியது, தகவல் அறியும் உரிமையைத்தான் என்று.
நினைத்தபடியே, தாங்கள் சொல்லும் பொய்களையே உண்மைகளாக பரப்பும் வகையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மிகப்பெரிய திருத்தங்களைச் செய்திருக்கிறது மோடி அரசு.
இனிமேல் தகவல் ஆணையர்களாக நியமிக்கப்படும் ஆட்களை மத்திய அரசுதான் முடிவு செய்யும். அவர்களுடைய பதவிக்காலத்தையும் அரசாங்கமே தீர்மானிக்கும். இதுவரை 60 வயதில் பதவியேற்றால் 65 வயது வரையும், 63 வயதில் பதவியேற்றாலும் 65 வயது வரையும் மட்டுமே பதவியில் நீடிக்க முடியும்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
ஒருவர் ஒருமுறை மட்டுமே பதவி வகிக்க முடியும். ஆனால், இனி அரசுக்கு சாதகமாக செயல்படும் ஆணையர்களுக்கு பதவி நீடிப்பும், ஊதிய உயர்வும் கொடுக்கும் உரிமை அரசாங்கத்திடம் இருக்கிறது. இது போதாதா?
நாட்டில் நீதிபதிகளே கவர்னர் பதவிக்காகவும், கோடிக்கணக்கான ரூபாய்க்காகவும் ஆசைப்பட்டு தீர்ப்பு சொன்னதை பார்த்த நாடு இது. சாதகமாக தீர்ப்பு சொல்ல மறுத்த நீதிபதியையே கொலை செய்தவர்கள் நிறைந்த நாடு இது.
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தால் வெளிவந்த ஊழல்களைப் போலவே, தகவல் அறியும் உரிமையைப் பயன்படுத்திய 84 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பத்திரிகை யாளர்களும் அடங்குவார்கள். இவர்களிலும் 77 பேர் கொலைசெய்யப்பட்டவர்கள். 7 பேர் தற்கொலைக்கு தள்ளப்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது. இவர்களைத் தவிர, 2005 முதல் துன்புறுத்தப்பட்டவர்கள் 169 பேர் எனவும், அச்சுறுத்தலுக்கு ஆளானவர்கள் 183 பேர் என்றும் தெரியவந்துள்ளது.
உலக அளவில் நூறுக்கும் மேற்பட்ட நாடுகளில் இத்தகைய சட்டம் அமலில் இருக்கிறது. ஆனால், இந்தியாவின் சட்டம்தான் சாமானியர்களுக்கும் தகவல் கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது என்று கூறப்பட்டது. அந்த வகையில் உலக அளவில் 7 ஆவது சிறப்பான இடம் இந்தியாவுக்கு அளிக்கப்பட்டிருந்தது.
அந்த அளவுக்கு சிறப்புவாய்ந்த சட்டத்தை பாதுகாக்க வேண்டியது இந்திய குடிமக்களின் கடமை. அரசாங்கத்தை கேள்வி கேட்க தவறினால், உண்மையை அறிய முடியாமல் போகும் என்று சமூகநல ஆர்வலர்கள் எச்சரிக்கிறார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)