கே.எஸ். அழகிரியைச் சந்தித்து வாழ்த்து பெற்ற காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர்! (படங்கள்) 

தமிழ்நாடு நகர்ப்புறத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடந்துமுடிந்தது. அன்று பதிவான வாக்குகள் நேற்று (22ஆம் தேதி) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியது. அதேபோல், 138 நகராட்சிகளில் 132 நகராட்சிகளையும், 489 பேரூராட்சிகளில் 435 பேரூராட்சிகளையும் திமுக கைப்பற்றியது. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸும் குறிப்பிட்ட வெற்றியை பெற்றி இருக்கிறது. அதன்படி பெரம்பூர் தொகுதி 37வது வார்டில் மாமன்ற உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்ற டில்லி பாபு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ் அழகிரிக்கு மாலை அணிவித்து, வீரவாள் வழங்கினார்.

அதேபோல், திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள தனது வாழ்க்கை சுயசரிதை புத்தகமான ‘உங்களில் ஒருவன்’ வெளியிட்டு விழாவுக்கான அழைப்பிதழை திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி, கே.எஸ். அழகிரியைச் சந்தித்து வழங்கினார்.

KS Azhagiri local body election
இதையும் படியுங்கள்
Subscribe