Advertisment

ஆர்.எஸ்.பாரதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதிகேட்டு மனு!

RS Bharathi issue; allowed to sue for contempt of court

Advertisment

நீதிபதிகளை அவமதிக்கும் வகையில் பேசியதாக தி.முக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கேட்டு அரசு தலைமை வழக்கறிஞரிடம்மனு அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் அன்பகத்தில் கலைஞர் வாசகர் வட்டம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியபோது, தாழ்த்தப்பட்டசமுதாயத்தினருக்கு நீதிபதி பதவி கிடைத்ததுதிராவிட இயக்கம்போட்ட பிச்சை என ஆர்.எஸ்.பாரதி பேசி இருந்தார்.

ஆர்.எஸ்.பாரதியின் இந்த சர்ச்சை பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அவருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 23-ஆம் தேதி கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisment

நீதிபதிகள் தங்கள் திறமையால்அல்லாமல், அரசியல் கட்சிகளின் ஆதரவாலேயே அந்தப் பதவிக்கு வருகிறார்கள் என்பதைபோல் ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு இருந்ததாகவும், இது ஒட்டுமொத்த நீதித்துறையின் மாண்பை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதால்,அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கேட்டு வழக்கறிஞர் ஆண்டனி ராஜ் என்பவர் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணனிடம் இன்று மனு அளித்தார். இந்த மனு நாளை மறுநாள் வீடியோ கான்பரன்ஸ் மூலம்விசாரணைக்கு வருகிறது.

highcourt
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe