அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஆர்.எஸ் பாரதி கண்டனம்...

 RS Bharathi condemns Minister Jayakumar

திருப்போரூரில் திமுக எம்.எல்.ஏ. துப்பாக்கிச்சூடு நடத்தியதாக செய்திகள் வெளியான நிலையில், இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்திக்கயில், திமுகவில் துப்பாக்கி கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது என தெரிவித்திருந்தார். அதேபோல் திமுகவினரை பார்த்து மக்கள் அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்று விமர்சித்திருந்தார். இந்நிலையில் இதற்கு திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்,

திமுகவை விமர்சிப்பதற்கு அமைச்சர் ஜெயக்குமார் எந்த தகுதியும் கிடையாது. திமுகவை வன்முறை கட்சி என கூறிய அமைச்சருக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். ரவுடிகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ள வானத்தை நோக்கி எம்.எல்.ஏ.வின் தந்தை சுட்டது திசை திருப்பப்பட்டுள்ளது. வானத்தை நோக்கி சுட்டதற்குபொய் வழக்குப் பதிவு செய்து எம்.எல்.ஏ.வைகைது செய்துள்ளது திட்டமிட்ட சதி செயல். தாக்குதல் நடத்த வந்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நிலத்தை அபகரிக்க நடைபெற்ற முயற்சி போல் அமைச்சர் பேசுவது உள்நோக்கத்தின்வெளிப்பாடு. திமுக எம்.எல்.ஏ. சட்டத்தின் முன் நின்று நியாயத்தை நிலைநாட்டுவார் என்றார்.

திருப்போரூர் துப்பாக்கிச்சூடு வழக்கில்ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் குமார் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே 12 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

admk jayakumar rs barathi
இதையும் படியுங்கள்
Subscribe