Advertisment

வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜரானார் ஆர்.எஸ்.பாரதி!

RS Bharathi to appear in court

Advertisment

வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கு விசாரணைக்கு, தி.மு.கஎம்.பிஆர்.எஸ்.பாரதி, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். அவருக்கு வழக்குத் தொடர்பான குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது.

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த கருத்தரங்கு ஒன்றில், பட்டியல் இனத்தவர்கள் குறித்து கருத்துத் தெரிவித்ததாகக் கூறி, தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதிக்கு எதிராக, ஆதித் தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யாணசுந்தரம் அளித்த புகாரின் பேரில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டதை அடுத்து, கடந்த மே மாதம் ஆர்.எஸ் பாரதி இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

Advertisment

சென்னையில் உள்ள எம்.பி- எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஆர்.எஸ்.பாரதி நேரில் ஆஜரானார்.

அவருக்கு வழக்குத் தொடர்பான குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கிய நீதிபதி ரவி, இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 20-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

rs barathi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe