Advertisment

ரூ.80 கோடி சிட்ஃபண்ட் மோசடி! போலீசாரை முற்றுகையிட்ட பொது மக்கள்!!

Rs 80 crore bond fraud!!

உத்தமபாளையத்தில் தனியார் சிட்ஃபண்ட் ஒன்று, ரூ.80 கோடிமோசடி செய்ததுதொடர்பாக விசாரணைக்கு வந்த போலீஸாரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Advertisment

தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையத்தில் ‘உதய நிலா’ சிட்ஃபண்ட் என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதில், அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ரூ.80 கோடி வரை மக்கள் டெபாஸிட் செய்தனர். கடந்த 2 மாதமாக வட்டி தராத நிலையில், பொதுமக்கள் தங்களது முதலீட்டு பணத்தைத் திரும்பக் கேட்டனர். ஆனால், இதன் பங்குதாரர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்தனர்.

Advertisment

கடந்த திங்கள்கிழமை தேனி எஸ்.பிஅலுவலகத்தில் இதுகுறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இது பல கோடி மோசடி என்பதால் திண்டுக்கல் பொருளாதார குற்றப்பிரிவிற்குப் புகாரை மாற்றம் செய்தனர். அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி தலைமையில் போலீஸார் விசாரணைக்கு வந்தனர்.

அவர்களை திடீரென சூழ்ந்து முற்றுகையிட்ட பொதுமக்கள், தங்களது பணத்தை மீட்டுத் தரவேண்டும். உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனை அடுத்து உத்தமபாளையம் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

chit fund
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe