Skip to main content

ரூ.80 கோடி சிட்ஃபண்ட் மோசடி! போலீசாரை முற்றுகையிட்ட பொது மக்கள்!!

Published on 24/09/2020 | Edited on 24/09/2020

 

Rs 80 crore bond fraud!!


உத்தமபாளையத்தில் தனியார் சிட்ஃபண்ட் ஒன்று, ரூ.80 கோடி மோசடி செய்தது தொடர்பாக விசாரணைக்கு வந்த போலீஸாரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.


தேனி மாவட்டத்தில் உள்ள  உத்தமபாளையத்தில் ‘உதய நிலா’ சிட்ஃபண்ட் என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதில், அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ரூ.80 கோடி வரை மக்கள் டெபாஸிட் செய்தனர். கடந்த 2 மாதமாக வட்டி தராத நிலையில், பொதுமக்கள் தங்களது முதலீட்டு பணத்தைத் திரும்பக் கேட்டனர். ஆனால், இதன் பங்குதாரர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்தனர். 

 

கடந்த திங்கள்கிழமை தேனி எஸ்.பி அலுவலகத்தில் இது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இது பல கோடி மோசடி என்பதால் திண்டுக்கல் பொருளாதார குற்றப்பிரிவிற்குப் புகாரை மாற்றம் செய்தனர். அதன் அடிப்படையில்  இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி தலைமையில் போலீஸார் விசாரணைக்கு வந்தனர். 

 

அவர்களை திடீரென சூழ்ந்து முற்றுகையிட்ட பொதுமக்கள், தங்களது பணத்தை மீட்டுத் தரவேண்டும். உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனை அடுத்து உத்தமபாளையம் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தீபாவளி சீட்டு சீட்டிங்; சூறையாடிய மக்கள் - ஓனரை சுற்றி வளைத்த போலீஸ் 

Published on 12/11/2023 | Edited on 12/11/2023

 

chit fund Company owner arrested for, who cheated by give gifts for Diwali

 

திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் நகரத்தைச் சுற்றி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்கள் உள்ளன. இந்தப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்களை குறிவைத்து பல நிறுவனங்கள் களம் இறங்கின. அப்படியொரு நிறுவனம்தான் ஏ.பி.ஆர் சிட்பண்ட் நிறுவனம். பல்லாயிரம் பேரிடம் தீபாவளி சீட்டு பிடித்தது. 399 ரூபாய் முதல் 5000 ஆயிரம் ரூபாய் வரையிலான விதவிதமான ரேட் கார்டு போட்டு மக்களிடம் சீட்டு பிடித்தனர். 12 மாதம் கட்டி முடித்த பின் தரப்படும் பொருட்கள் எனச் சொல்லியுள்ள அந்த பட்டியலில் தீபாவளிக்கு பட்டாசு பாக்ஸ், தங்கக் காசு, மளிகை பொருட்கள், சில்வர் பொருட்கள், துணி, ஸ்வீட் என நீள்கிறது. அவ்வளவு பொருட்களை குறிப்பிட்டிருந்த பட்டியலை நம்பி ஆயிரக்கணக்கான மக்கள் மாதாமாதம் சீட்டு பணம் கட்டினர். சீட்டு பணம் வசூல் செய்ய ஊருக்கு ஊர் ஏஜென்ட்களை நியமித்து அவர்களுக்குப் பல ஆபர்களை தந்து சீட்டு பிடிக்கச் செய்தனர். அதன்மூலம் லட்சக்கணக்கான மக்கள் இந்த நிறுவனங்களில் சீட்டு பணம் கட்டினர்.

 

கடந்த சில ஆண்டுகளாக மக்களுக்கு சரியாக பொருட்களை தந்த நிறுவனம், கடந்த ஆண்டு முதல் சொதப்ப துவங்கியது. பாதி பேருக்கு பொருட்கள் தருவது, மற்றவர்களுக்கு தராமல் விடுவது என தொடங்கியது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான மக்களிடம் தீபாவளி சீட்டு பிடித்து பொருட்கள் தராமல் ஏமாற்றிய நிறுவனங்கள் மீது மக்களும், ஏஜென்ட்களும் புகார்கள் தந்தனர். அதன்படி 5 நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால் ஏ.பி.ஆர் நிறுவனத்திடம் தீபாவளிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பிருந்தே பொருட்கள் வேண்டும் என நெருக்கடி தந்தனர். ஆனால் பொருட்கள் தரவில்லை. உரிமையாளரும் தலைமறைவாகிவிட்டார்.

 

chit fund Company owner arrested for, who cheated by give gifts for Diwali

 

இதனால் அதிருப்தியான மக்கள் நவம்பர் 10 ஆம் தேதி காலை 7 மணிக்கு சுமார் 300 பேர் அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் முன்பு குவிந்தனர். குடோனுக்குள் புகுந்த மக்கள் உள்ளிருந்த பொருட்களை சூறையாடினர். சோபா, பீரோ, டிவி, ஏசி, நாற்காலிகள், பேட்டரி, பைக்குகள் போன்றவற்றை தங்களது வண்டிகள் மற்றும் ஆட்டோக்களில் வைத்து எடுத்துச் சென்றனர். அதேபோல் அருகில் இருந்த அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான பெரிய மளிகை கடையில் இருந்த மளிகை பொருட்களை மூட்டை மூட்டையாக தூக்கிச் சென்றனர். அதேபோல் அந்த நிறுவனத்துக்குச் சொந்தமாக பைபாஸ் சாலையில் உள்ள ஹோட்டல், செய்யாற்றைவென்றாளில் உள்ள குடோன், பாப்பந்தாங்கல் கிராமத்தில் இருந்த மளிகை பொருட்கள் வைத்திருந்த குடோன் போன்றவற்றில் புகுந்த கும்பல் உள்ளிருந்த பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களை எடுத்துச் சென்றனர்.   

 

தகவல் தெரிந்து வந்த போலீஸார் எச்சரிக்கை செய்ததும் மக்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். பொருட்கள் கிடைக்காத ஒரு கும்பல் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் அல்தாப் வீட்டின் முன்பு முற்றுகை மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சில தினங்களுக்கு முன்பு செய்யார் அல்தாப் வெளியிட்ட வீடியோவில், நாங்கள் யாரையும் ஏமாற்றமாட்டோம். சில தடங்கல்கள் பணம் கட்டிய அனைவருக்கும் நவம்பர், டிசம்பரில் தீபாவளி சீட்டு பொருட்கள் தரப்படும். அது தந்து முடிந்ததும் பொங்கலுக்கு தரவேண்டிய பொருட்கள் தரப்படும் என அறிவித்தார். மற்றொரு வீடியோவில் முன்னாள் எம்.எல்.ஏ தன்னை பணம் கேட்டு மிரட்டுவதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.

 

chit fund Company owner arrested for, who cheated by give gifts for Diwali

 

கடந்த சில வாரங்களாக செய்யார், வந்தவாசி, காஞ்சிபுரம், மேல்மருவத்தூர் உட்பட அப்பகுதி அரசியல் பிரமுகர்கள், அடியாட்கள், கட்டப் பஞ்சாயத்து கும்பல்கள் கார்களில், வேன்களில் ஏஜென்ட்களோடு இந்த நிறுவனத்தின் அலுவலகத்துக்கு வந்து மிரட்டி பொருட்களை வாங்கிச் சென்றதாக கூறப்படுகிறது. பொருள் கிடைக்காமல் ஏமாந்தவர்களே சூறையாடலில் ஈடுபட்டுள்ளார்கள் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். 

 

இந்நிலையில் தீபாவளி சீட்டு கட்டியவர்களுக்கு பொருள் தரவில்லை என, விழுப்புரம் மாவட்டம் வானூர் அருவாப்பாக்கம் வசந்தா மேரி தந்த புகாரின் அடிப்படையில் நவம்பர் 11 ஆம் தேதி சித்தூரில் பதுங்கியிருந்த அல்தாப் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நிறுவன மேலாளர் கமலக்கண்ணனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 

 

Next Story

ஏலச்சீட்டு நடத்தி 34 லட்சம் ரூபாய் சுருட்டல்; பெற்றோர், மகன்களுக்கு தலா 2 ஆண்டுகள் சிறை

Published on 16/09/2023 | Edited on 16/09/2023

 

 34 lakh rupees rolled by conducting auction; 2 years imprisonment for parents and sons each

 

சேலம் தாதகாப்பட்டியைச் சேர்ந்தவர் தங்கராஜ் (50). இவருடைய மனைவி பொன்னையா (48). இவர்களுக்கு உமாசங்கர் (36), மகேந்திரன் (35) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் சேர்ந்து அப்பகுதியில் மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி வந்தனர்.

 

கடந்த 2012ம் ஆண்டு முதல் 2014 வரை ஏலச்சீட்டில் பணம் செலுத்தியவர்களுக்கு முதிர்வு அடைந்த பிறகும் பணத்தைத் திருப்பிக் கொடுக்கவில்லை. முதலீட்டாளர்கள் பலமுறை பணத்தைத் திருப்பிக் கேட்டும், தராமல் இழுத்தடித்து வந்தனர்.

 

ஏமாற்றப்பட்ட முதலீட்டாளர்கள் சேலம் மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர். அதன்பேரில், தங்கராஜ், பொன்னையா, உமாசங்கர், மகேந்திரன் ஆகிய நான்கு பேர் மீதும் காவல்துறையினர் மோசடி வழக்குப்பதிவு செய்தனர். தங்கராஜ் குடும்பத்தினர் 34.26 லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பது தெரிய வந்தது.

 

இந்த வழக்கு மீதான விசாரணை, சேலம் தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கிறிஸ்டல் பபிதா, குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 4.30 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். மோசடி வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் சிறைத் தண்டனை பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.