Rs 8 lakh worth of jewelery and money kept for the wedding were destroyed by fire!

Advertisment

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த சிறுவரப்பூர் கிராமத்தில் வசிப்பவர் ராஜேந்திரன் தம்பதியினர். இவர்களுக்கு ஐந்து பெண் பிள்ளைகள் உள்ள நிலையில், நான்காவது மகளுக்கு அடுத்த வாரம் திருமணம் நடைபெற உள்ளது.

இந்நிலையில், நேற்று வீட்டில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில், மின்கசிவு காரணமாக கூரை வீடு தீப்பற்றி எரிந்தது. தீ வேகமாகப் பரவியதை அறிந்த ராஜேந்திரன் மற்றும் அவரது பிள்ளைகள் அலறல் சத்தத்துடன் வீட்டிலிருந்து வெளியே ஓடிவந்தனர். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின்பு, தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இத்தீவிபத்தில் மகளின் திருமணத்துக்காக வைத்திருந்த 16 பவுன் நகை, ரூ.2.75 லட்சம் ரொக்கப் பணம், டிவி, கட்டில் உள்ளிட்ட ரூ.8 லட்சம் மதிப்பிலான அத்தியாவசியப் பொருட்கள் என அனைத்தும் எரிந்து நாசமாகின. மேலும், வீட்டின் அருகே கட்டப்பட்டிருந்த நான்கு ஆடுகள் தீ விபத்தில் உயிர் இழந்தன. இதேபோல் அவ்வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த சக்திவேல் என்பவரது ஜே.சி.பி எந்திரம் மீதும் தீ பரவியதால் பலத்த சேதம் அடைந்தது. இதுகுறித்து கம்மாபுரம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.