dddd

Advertisment

மதுரை ஆவின் கூட்டுறவு நாணய சங்கத்தில் ரூ.7.92 கோடி கையாடல் செய்த வழக்கில், சங்கத்தின் செயலாளர், மற்றும் கணக்காளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆவின் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் கடந்த 2017-18 ஆண்டுகளில் ஊழியர்கள் வைப்பு நிதியிலிருந்து ரூ.7.92 கோடி கையாடல் செய்தது தொடர்பாக கூட்டுறவு பதிவாளர் அளித்த புகாரில் செயலாளர் மதலையப்பன் மற்றும் கணக்காளர் ஜெகதீசன் வணிக குற்றப்புலனாய்த்துறை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.