rs 77,120 cash was seized in the raid at the Sir Registrar's office

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தங்க நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த சார் பதிவாளர் அலுவலகத்தில் முத்து அழகேசன் என்பவர் சார் பதிவாளராக கடந்த 9 மாதங்களாக பணிபுரிந்து வருகிறார். இந்த சார் பதிவாளர் அலுவலகத்தில் தினமும் 100க்கும் மேற்பட்ட நிலம், வீட்டுமனை பட்டா, மற்றும் வீடு உள்ளிட்டவற்றை பத்திரப் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த சார் பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடாகப் பத்திர பதிவு நடைபெற்று வருவதாகவும், இடைத்தரகர்களை வைத்து கூடுதலாகப் பணம் வசூலிப்பதாகவும் வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு வந்த தகவலின் பெயரில் இன்று 11பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். சோதனை இரவு 1 மணி வரை நீடித்த நிலையில், இறுதியாக கணக்கில் வராத ரூ. 77,120 பணம் மற்றும் முக்கிய சில ஆவணங்கள் பறிமுதல் செய்தனர்.