Advertisment

''கடந்த ஆட்சியில் கூட்டுறவுத்துறையில் ரூ.750 கோடி மோசடி''- அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி!

dmk

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்டவடக்கம்பட்டியில்கூட்டுறவுகல்லூரியைதமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தொடங்கி வைத்து மாணவ மாணவிகளுக்கு விண்ணப்பங்களை வழங்கினார்.

Advertisment

அதன்பின் அவர்செய்தியாளர்களைச்சந்தித்துபேசுகையில், ''தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதல் 33 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது தமிழகத்திலேயே முதன் முறையாக ஆத்தூரில் கூட்டுறவுத் துறைக்கான கல்லூரி தொடங்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும்அரசாகதமிழக அரசு விளங்கி வருகிறது. தற்போது தொடங்கப்பட்டுள்ள கூட்டுறவு கல்லூரி மூலம் ஏராளமான கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவார்கள். இதேபோல் கூட்டுறவுத்துறையில்காலியாகஉள்ள இடங்கள் விரைவில் நிரப்பப்படும்.

Advertisment

கடந்த 10ஆண்டுக்காலஅ.தி.மு.க ஆட்சியில் கூட்டுறவுத்துறையில் ரூ.750 கோடி அளவில் மோசடி நடந்துள்ளது. இதனைக் கண்டுபிடிக்க மூத்தவக்கீல்கள்கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் கூட்டுறவுத்துறை மோசடிகள் குறித்துப் பல வழக்குகள் முறையாக விசாரணை நடத்தப்படவில்லை. அடுத்த இரண்டு ஆண்டுகளில் குறைந்தபட்சம் ரூ.300 கோடி மோசடி சொத்துக்களாவது பறிமுதல் செய்து ஏலம் விடப்பட்டு அரசு கஜானாவில் சேர்க்கப்படும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது. கூட்டுறவுத்துறையில் காலிப் பணியிடங்கள் நிரப்பும் பணி எந்தவித தவறும் நடக்காதவாறு வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறும் தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே பணி வழங்கப்படும். கூட்டுறவுத்துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உருவாகி வருகிறது'' என்று கூறினார்.

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe