Skip to main content

கட்டுக்கட்டாக பணம்; போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Published on 07/12/2024 | Edited on 07/12/2024
Rs 75 lakh seized raid by Railway Security Forces Trichy railway station

திருச்சி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் செபஸ்டின்,  க்ரைம் ஆய்வாளர் ரமேஷ் குழுவினர் 6வது நடைமேடையில் பாதுகாப்பு பணிகள் ஈடுபட்டிருந்தனர்.  ஹவுராவில் இருந்து திருச்சிக்கு ரயில் ஒன்று வந்தது. அப்போது கருப்பு பையுடன் சந்தேகத்துக்கு இடமாக வந்த நபரின் உடைமைகளை  சோதனை மேற்கொண்ட போது  அவரது பையில்  உரிய ஆவணங்கள் இல்லாமல்  கட்டுக்கட்டாக ரூபாய் 75 லட்சம் எடுத்து வந்தது தெரிய வந்தது.

உடனடியாக காவல்துறையினர் அவற்றை பறிமுதல் செய்தனர். மேற்கொண்ட விசாரணையில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வேதமாணிக்கம் என்பவரது மகன்  ஆரோக்கியதாஸ் (49) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து வருமான வரித்துறையினருக்கு ரயில்வே பாதுகாப்பு காவல்துறையினர்mதகவல் தெரிவித்தனர். பின்னர் வருவான வரித்துறை துணை இயக்குனர் ஸ்வேதாவிடம் பணத்தை ஒப்படைத்தனர்.

இதுகுறித்து வருமானத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிடிப்பட்ட பணம் 75 லட்சம்  ஹவாலா பணம்  என கூறப்படுகிறது.

சார்ந்த செய்திகள்