Advertisment

பறிமுதலான ரூ.73 லட்சம்! பறக்கும்படை அலுவலர் பதற்றம்! -சிவகாசி சந்தேகம்!

சிவகாசி பேருந்து நிலையம் அருகே சோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படையினர், அவ்வழியே வந்த ஒரு வாகனத்தை நிறுத்தினர். அதில், தனியார் ஏ.டி.எம்மில் பணம் வைப்பதற்காகக் கொண்டு செல்லப்பட்ட பணம் ரூ.73,50,000 இருந்திருக்கிறது. உரிய ஆவணம் இல்லாததால், அந்தப் பணத்தை பறிமுதல் செய்து, சிவகாசி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர்.

Advertisment

election

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

தகவல் கிடைத்து சிவகாசி செய்தியாளர்களும் ஊடகவியலாளர்களும் அங்கு சென்றனர். தேர்தல் பறக்கும்படை அலுவலர் சரவணபெருமாள், “பறிமுதல் செய்த பணத்தை பத்திரிக்கையாளர்களிடம் காட்டுவதற்கு அனுமதியில்லை” என்றார். ‘பெரிய தொகையாக இருக்கிறது. எதையோ மறைக்கப் பார்க்கின்றீர்கள்.’ என்று செய்தியாளர்கள் சந்தேகம் எழுப்பியவுடன், அலுவலகக் கதவை மூடி பணத்தை சீல் வைத்தனர்.

election

election

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

ஏடிஎம் பணம் ரூ.73,50,000 என்பதெல்லாம் உளவுத்துறையிடம் கேட்டறிந்த தகவல்தான்! தேர்தல் பறக்கும்படை அலுவலர் ஏனோ வாய் திறக்கவில்லை. உண்மையிலேயே பிடிபட்ட பணம் எவ்வளவு? தேர்தல் நேரத்தில் ஆவணம் இல்லாமல் இவ்வளவு பெரிய தொகையை ஏன் எடுத்துச்செல்ல வேண்டும்? பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும்படை அலுவலர் ஏன் பதற்றமடைய வேண்டும்? என்பது போன்ற கேள்விகளுக்கு அதிகாரிகளிடம் விடையில்லை.

police election commission Sivakasi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe