Advertisment

ஒரு ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் கூலி; விவசாயப் பணியில் வடமாநில தொழிலாளர்கள்!

rs 5,000 per acre is being bought by North State laborers doing agricultural work in Erode

ஈரோடு மாவட்டத்தில் காளிங்கராயன் வாய்க்கால் பாசனத்தில் 15 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன விதி பெறுகிறது. தற்போது பவானிசாகர் அணையில் இருந்து காளிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்குத் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து ஆர்.என்.புதூர் சுண்ணாம்பு ஓடை, பி.பி. அக்ரஹாரம், வைரப்பாளையம், கருங்கல்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நெல் சாகுபடி பணி தொடங்கி நடந்து வருகிறது.

Advertisment

இந்த நிலையில், தற்போது இந்த பகுதியில் நாற்று நடவுப்பணி தீவிரமாகியுள்ளது. தொழிலாளர்கள் பற்றக்குறையால் பல இடங்களில் மேற்கு வங்காளம், உத்தரபிரதேசம், பீகார், ஒடிசா போன்ற வெளி மாநில தொழிலாளர்கள் நாற்று நடவுப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Advertisment

இது குறித்து விவசாயிகள் கூறும்போது, “உள்ளூர் தொழிலாளர்கள் 100 நாள் வேலைத் திட்டத்திற்குச் சென்று விடுவதால், விவசாயப் பணிக்கு ஆட்கள் பற்றாக் குறை உள்ளது. நாற்று கட்டுதல், சுமந்து வருதல், நடவு செய்தல் என ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியாக ஆட்களை அழைக்க வேண்டி இருக்கிறது. இதனால் நேர விரயத்தைத் தவிர்க்க அனுபவம் பெற்ற வடமாநில தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தி உள்ளோம். இவர்கள் ஒரு ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் ஊதியமாக பெறுகின்றனர். தினமும் 5 ஏக்கர் வரை நடவு செய்கின்றனர். இன்னும் ஒரு வாரத்தில் நாற்று நடவு பணிகளை முடித்து விட்டு சொந்த மாநிலங்களுக்குத் திரும்பி விடுவார்கள்” என்றனர்.

Erode Farmers
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe