Rs. 5 lakh money brought without proper documents in Cuddalore seized!

மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில், கடலூர் நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த முகமது கௌசிக் என்பவர் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் இரட்டை பிள்ளையார் கோயில் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது தாசில்தார் ஜெயராமன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.

Advertisment

அப்போது, உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ஐந்து லட்ச ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து கடலூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் பலராமன், உதவி தேர்தல் அலுவலர் அபிநயா அவர்களிடம் ஒப்படைத்தார்.