Advertisment

வயதான தம்பதிகளின் வீட்டுக்குள் புகுந்து ரூ.5 லட்சம் நகை, பணம் கொள்ளை!

Robbery

கள்ளக்குறிச்சி அருகில் உள்ளது தியாகதுருகம். இதையடுத்து உள்ளது மகரூர் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் 82 வயது குமாரசாமி. இவருக்கு ஐந்து மகன்கள், அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். குமாரசாமி, மற்றும் அவரது மனைவி சிவபாக்கியம் ஆகிய இருவரும் அதே ஊரில் தனியே வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம், தாங்கள் வசித்து வந்த வீட்டைப் பூட்டிவிட்டு அதே கிராமத்தின் ஒரு பகுதியில் குடியிருக்கும் மூத்த மகன் வீட்டிற்குச் சென்றுள்ளனர். மறுநாள் காலை தங்கள் வீட்டுக்கு திரும்பிவந்து பார்த்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்துள்ளது.

Advertisment

வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ திறந்தநிலையில், துணிகள் கலைந்து சிதறிக் கிடந்துள்ளது.இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குமாரசாமி, சிவபாக்கியம் தம்பதியினர் காவல்துறையினரை வரவழைத்தனர். போலீசார், உடைக்கப்பட்டிருந்த பீரோவை சோதனையிட்டனர். அதில் இருந்த 12 பவுன் நகை, ஒரு லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றைமர்ம நபர்கள்கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வரஞ்சரம் காவல் நிலையத்தில் குமாரசாமி அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களைதேடி வருகின்றனர்.

Advertisment

Robbery
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe