ரூ.45 லட்சம் மோசடி புகார்; நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மீது புகார் 

Rs 45 lakh  complaint; Complaint against the state coordinator of Naam Tamilar Party

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத் தென்னரசு மீது அம்பத்தூர் காவல் நிலையத்தில் மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அம்பத்தூரில் வசித்து வருபவர் அன்புதென்னரசன். இவர் நாம் தமிழர் கட்சியில் மாநில ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த 2017ம் ஆண்டு அய்யப்பாக்கம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக கூறி கொரட்டூர் அக்ரஹாரத்தை சேர்ந்த ஜெயராம் என்பவரிடம் 45 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். பணம் கொடுத்து நெடு நாளாகியும் வீடு வாங்கி தராமல் கொடுத்த பணத்தையும் திருப்பி கொடுக்காமல் இருந்ததால் அம்பத்தூர் காவல்நிலையத்தில் ஜெயராம் புகாரளித்துள்ளார்.

புகார் அளித்தும் எந்த விதமான நடவடிக்கைகளும் காவல்துறையினர் எடுக்காததால் மீண்டும் 2022ம் ஆண்டு அன்புதென்னரசு மீது ஜெயராம் புகாரளித்துள்ளார். மேலும் தீவிர நடவடிக்கை எடுக்கக்கோரி ஜெயராம் நீதி மன்றத்தை நாட, நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இன்று அன்புத் தென்னரசின் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்
Subscribe