சென்னையில் இருந்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிக்கு தனியார் சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் நவீத் அன்வர் என்பவரும் பயணம் மேற்கொண்டிருந்தார். இந்த பேருந்தானது கடலூர் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது போலீசார் இந்த பேருந்தில் ஏறி அதிரடி சோதனை மேற்கொண்டனர். அச்சமயத்தில் நவீத் அன்வரிடம் இருந்த உடைமைகளை போலீசார் சோதனை செய்தனர்.
அதில் உரிய ஆவணங்கள் இன்றி இருந்த ரூ. 40 லட்சம் மதிப்பிலான ஹவாலா பணம் எடுத்துச் செல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து ரூ. 40 லட்சம் மதிப்பிலான ஹவாலா பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூரில் ரூ. 40 லட்சம் மதிப்பிலான ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.