தொழிலதிபரிடம் ரூ.300 கோடி மோசடி; கோவை போலீசார் அதிரடி!

Rs 300 crore scam from businessman; Coimbatore police in action

கோவையைச் சேர்ந்த தொழில் அதிபர் சிவராஜ் என்பவர் பீளமேடு பகுதியில் மின் காற்றாலை அலுவலகத்தை நடத்தி வருகிறார். இவரது அலுவலகத்தில் 13 பேர் பணிபுரிந்து வந்துள்ளனர். இவர்கள் 5 பேரும் சிவராஜ்க்கு சொந்தமான சுமார் 200 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துக்களுக்கு போலி ஆவணங்கள் தயார் செய்தும், 100 கோடி ரூபாய் பணத்தையும் மோசடி செய்துள்ளனர். இவ்வாறு மோசடி செய்ததை அறிந்த சிவராஜ் இது குறித்து கோவை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மோசடியில் ஈடுபட்ட தீஷா, சக்தி சுந்தர், சிவக்குமார், வசந்த் மற்றும் ஷீலா ஆகிய ஐந்து பேரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த 5 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். அதன் பின்னர் 5 பேரையும் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர்.

இந்நிலையில்காவல் துறையினர் இன்று குற்றவாளிகளிடமிருந்து சுமார் 12 கோடி பணம்,140 சவரன்பவுன் நகை, 100 கோடி மதிப்பிலான முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றி உள்ளனர். அதனைத் தொடர்ந்து போலீசார் நீதிமன்றத்தில் பணம் மற்றும் ஆவணங்களை ஒப்படைத்து மீண்டும் குற்றவாளிகளை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Coimbatore police
இதையும் படியுங்கள்
Subscribe