Puducherry wine bottles seized!

Advertisment

கடலூர் மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவின் காவல் சிறப்பு படையினருக்கு புதுச்சேரியிலிருந்து காரில் மது கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது.

அதையடுத்து கடலூர் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு அருகே சந்தேகத்துக்கிடமான ஒரு காரை மடக்கி பிடித்தனர். அதில் 10 பெட்டிகளில் 180 மிலி அளவு குவார்ட்டர் 480 பிராந்தி பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.

காரை பறிமுதல் செய்த போலீசார் கார் ஓட்டுநர் ஸ்ரீமுஷ்ணம் பாளையங்கோட்டையை சேர்ந்த கொளஞ்சி மகன் வெங்கடேசன் (28) என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Puducherry wine bottles seized!

Advertisment

இதேபோல் சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீசார் வாகன சோதனை செய்தனர். அப்போது புதுச்சேரியிலிருந்து காரில் ரூ 2 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை கடத்திய சிதம்பரம் அருகே மீதிக்குடி கிராம பகுதியில் தங்கி அண்ணாமலை பல்கலைகழகத்தில் பட்டபடிப்பு படித்து வரும் ருவாண்டா நாட்டை சேர்ந்த பர்கா பார்டிக் வி காலி, டக்ரூ டைமனா அலீஸ் கை காலி, நோட்டனி யுவன், முனிசா ஆலிவர் ஆகிய 4 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

Puducherry wine bottles seized!

இவர்கள் அண்ணாமலை நகர் பகுதிகளில் உள்ள வீடுகளில் தங்கி மது விற்பனை, கஞ்சா, பிரவுன் சுகர் போன்ற போதை பொருட்களை விற்று வருவதாகவும் இவர்களால் பல்கலைகழக மாணவர்களுக்கு தொடர்ந்து கலாச்சார சீர்கேடு ஏற்படுவதாக நடைபெறுவதாகவும், அண்ணாமலை நகர் மற்றும் சுற்றியுள்ள முத்தையா நகர் உள்பட பல நகர்களில் வசித்து வரும் பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதேபோல் ஆரோவில் பகுதியில் மது கடத்திய காரையும், 1350 மதுபாட்டிகல்களையும் போலீசார் பறிமுதல் செய்து வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.