Advertisment

"வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிவாரணம்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

Rs 3 lakh relief for the families of the dead

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்த நபர்களின் குடும்பங்களுக்குதலா ரூபாய் 3 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், களத்தூர் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் ஐந்து பேர் இறந்த துயரச் செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisment

இந்த வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா மூன்று லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூபாய் ஒரு லட்சமும் உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Announcement chief minister Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe