Advertisment

"எஸ்.ஐ. குடும்பத்திற்கு ரூபாய் 3 லட்சம் நிதியுதவி"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

publive-image

Advertisment

சாலை விபத்தில் உயிரிழந்த உதவி ஆய்வாளர் பிரசன்னா குடும்பத்திற்கு ரூபாய் 3 லட்சம் நிதியுதவி அளிக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக, முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வண்டலூர் வயர்லஸ் காவல்நிலையத்தில் தொழில்நுட்ப உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த T.பிரசன்னா (வயது 26) 18/10/2021 அன்று இரவு 08.00 மணியளவில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இடத்தில் இருந்து காமராஜர் சாலையைக் கடக்கும் போது அதிவேகமாக வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்ற செய்தியை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.

இந்த விபத்தில் உயிரிழந்த தொழில்நுட்ப உதவி ஆய்வாளர் T.பிரசன்னா குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூபாய் 3 லட்சம் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன்." இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

condolence Tamil Nadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe