பட்டாசு ஆலை விபத்து; ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு 

Rs 3 lakh compensation announced for the family of  deceased in cracker factory

விருதுநகர் அருகே உள்ள முத்துசாமி புரத்தில் விஜய் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வந்துள்ளது. இந்த நிலையில் இன்று வழக்கம் போல பட்டாசு ஆலையில் வேலைகள் நடந்துவந்த நிலையில், மதியம் 12 மணியளவில் திடீரென பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த நேரத்தில் கிட்டத்தட்ட 30 பேர் அங்கு பணியாற்றியதாகக் கூறப்படுகிறது.

இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அதில் 7 பேரில் உடல் அடையாளம் காணப்பட்டதாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் தீயை அணைத்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பட்டாசுக்கு மருந்து கலக்கும் போது ஏற்பட்ட உராய்வின் மூலம் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். அத்தோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் என்றும், படுகாயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Virudhunagar
இதையும் படியுங்கள்
Subscribe