Advertisment

உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் ரூ. 2,577 கோடி இழப்பு!

ll

Advertisment

கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடுஅரசின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையைநிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது, "2011 - 2016ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் 17,000 கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டது. அதிமுக அரசின் 2016 - 2021ஆம் ஆண்டு ஆட்சியில் இந்தப் பற்றாக்குறை 1.50 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மாநிலத்தின் கடனை செலுத்தும் தன்மை குறைந்ததால் வட்டி விகிதம் அதிகரித்துள்ளது. தமிழகத்துக்கு மத்திய அரசு ஜிஎஸ்டி தொகையாக 20,033 கோடி ரூபாய் தர வேண்டியுள்ளது. மின்சார வாரியம் மற்றும் போக்குவரத்துறையில் மட்டும் 2 லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கிறது. குறிப்பாக கடந்த ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத காரணத்தால் ரூ. 2,557 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.

ptr palanivel thiyagarajan
இதையும் படியுங்கள்
Subscribe