கள்ளக்குறிச்சி கிராமச்சாவடிதெருவைச்சேர்ந்த புண்ணியமூர்த்தி என்பவர் ஓ.பி.எஸ் அணியில்நகரசெயலாளராக உள்ளார். இவரிடம் கடந்த 2023 நவம்பர் மாதம் கோவை மாவட்டம்போத்தனூர்பகுதி அருள்முருகன் நகரச் சேர்ந்த கலீல் ரகுமான்(60) என்பவர் அம்மாஎக்ஸ்பிரஸ்நாளிதழில் நிர்வாகஇயக்குனராகஉள்ளதாகவும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் பழக்கம் உள்ளது. இதன் மூலம் பல்வேறு துறையில் அரசு வேலை வாங்கிதந்துள்ளதாககூறி அறிமுகமாகியுள்ளார்.
இதனை நம்பி தன்னுடைய மகளுக்கு இளநிலை உதவியாளராக அரசு வேலை வாங்கி தருவதற்கு ரூபாய் 15 லட்சத்து 92 ஆயிரம்களில்ரகுமானிடம்கொடுத்ததாககூறப்படுகிறது. ஆனால் அரசு வேலையும் வாங்கித் தரவில்லை பணத்தையும் திருப்பி தராமல்ஏமாற்றியதாகதெரிகிறது. இதுகுறித்து புண்ணியமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சிபோலீசார்கடந்த மாதம் கலீல் ரகுமான் மீது வழக்குப் பதிந்து தேடி வந்தனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி எம்.ஆர்.என்.நகரைச் சேர்ந்த துரை(65) என்பவரிடம்கலீல்ரகுமான்என்பவர் தான் அம்மாஎக்ஸ்பிரஸ்நாளிதழ் நிர்வாகஇயக்குனர்எனகூறி அறிமுகமாகியுள்ளார்.
உன்னுடைய மகனுக்கு அரசு மருத்துவமனையில்பிசியோதெரபிவேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறினார். இதனை நம்பிய துரை கடந்த நவம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 10 தவணைகளில் வங்கி மூலம் ரூபாய் 9 லட்சத்து 68,500கலில்ரகுமான் கூறியவங்கிகணக்கிற்குபணம் செலுத்தியுள்ளார். இதுகுறித்து கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சிபோலீசார்வழக்குப்பதிந்து தனிப்படை அமைத்து அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்து வந்த கலீல்ரகுமானைகைது செய்தனர்.