கரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் திருட்டு மற்றும் காணாமல் போன செல்போன்கள் குறித்த புகார், ஆன்லைன் பண மோசடி சைபர் கிரைமில் புகார் அளிக்கப்பட்டது. அவற்றை காவல் துணை கண்காணிப்பாளர் கீதாஞ்சலி தலைமையிலான போலீசார் துரிதமாக கண்டறிந்து அவ்வப்போது ஒப்படைத்து வருகின்றனர். அந்த வரிசையில் இன்று செல்போன் மற்றும் பணம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் கலந்து கொண்டு செல்போன் மற்றும் பணத்தை இழந்தவர்களிடம் ஒப்படைத்தார். இன்று 22 லட்சம் மதிப்புள்ள 125 ஸ்மார்ட் செல்போன்களை போலீசார் ஒப்படைத்தனர். இதே போன்று ஆன்லைனில் பணத்தை இழந்தவர்களுக்கு 1,11,399 ரூபாய் பணத்தையும் வழங்கினர். கடந்த ஒரு ஆண்டில் 279 செல்போன்கள் சைபர் கிரைம் மூலம் கண்டறிந்து பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், இரண்டரை பவுன் தங்க நகைக்கள் மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டதாகவும் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார். மேலும், ஆன்லைனில் பணம் பறிமாற்றத்தின் போது ஏமாற்றிய, 10 லட்சம் வங்கியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.