Skip to main content

“நாங்குநேரியை விட்டுக்கொடுத்ததற்காக ரூ.20 கோடி கைமாறியது!” -திமுக-காங்கிரஸ் மீது ராஜேந்திரபாலாஜி காட்டம்!

Published on 09/10/2019 | Edited on 09/10/2019

நாங்குநேரி – களக்காடு ஒன்றியத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி  தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது -
“நாங்குநேரி தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு திமுக விட்டுக் கொடுத்ததில் 20 கோடி ரூபாய் கைமாறியுள்ளது. தொகுதிவிட்டு தொகுதி மாறி நிற்பது தலைவர்களுக்குதான் பொருந்தும். ராகுல்காந்தி, சோனியா,  அழகிரி போன்ற முன்னணி தலைவர்கள் எந்தத் தொகுதியில் வேண்டுமானாலும் நிற்கலாம். ஆனால் உள்ளூரில் ஆள் கிடைக்காமல் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர் இந்தத் தொகுதியில் நிற்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒருவர் வார்டு விட்டு வார்டு  நின்றாலே யாரும் ஓட்டுப் போட மாட்டார்கள். ஒரு மாவட்டத்தைத் தாண்டி வேறு மாவட்டத்திற்கு வந்து போட்டியிடுவதை நாங்குநேரி வாக்காளர்கள் விரும்பவில்லை.


 

 "Rs. 20 crores transferred to Nankeneri for giving up!" Rajendra Balaji

 

இங்கே போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் பிறந்தது கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம்.  குடியிருப்பது சென்னையில். மாவட்ட தலைவர் பதவி வாங்கியது காஞ்சிபுரம் மாவட்டத்தில். தற்போது நாங்குநேரியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதிக்கும் காங்கிரஸ் வேட்பாளருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. பணத்தைக் கொடுத்து ஓட்டு வாங்கிவிடலாம் என்று காங்கிரஸ் வேட்பாளர் திட்டமிட்டுள்ளார். இவர் வெளிநாட்டில்தான் அதிகமாக இருப்பதாக கூறுகிறார்கள். 2 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளதாகவும், இதில் 200 கோடி ரூபாய் தேர்தலில் செலவழிக்கப் போவதாகவும் சொல்கிறார்கள்.

 

 "Rs. 20 crores transferred to Nankeneri for giving up!" Rajendra Balaji

 

முன்பு இருந்த தேசிய காங்கிரஸ் கட்சி இப்போது இல்லை. காங்கிரஸ் கட்சி பணத்திற்கு விலை போய்விட்டது காங்கிரஸ் வேட்பாளருக்கு ஓட்டுப் போட்டால் மனு கொடுக்க சென்னைக்குதான் செல்ல வேண்டும். ஒரு முதியோர் மனு கொடுக்க வேண்டும் என்றாலும்கூட சென்னைக்குதான் செல்ல வேண்டும். காங்கிரஸ் வேட்பாளர் வீடு சென்னையில் எங்கு இருக்கிறது? ஆதார் கார்டு எங்கு இருக்கிறது? ரேசன் கார்டு எங்கு இருக்கிறது? என்று காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கே தெரியவில்லை. சாதாரண மக்கள் அவரைப் பார்க்கவே முடியாது. வெற்றி பெற்றால் நாங்குநேரியில்தான் வசிப்பேன் என்று வசந்தகுமார் வாக்குறுதி கொடுத்தார்.  ஆனால்.. தொகுதி பக்கமே வரவில்லை. சென்னையில் அவர் தொழிலைத்தான் பார்த்தார். இந்தத் தொகுதியில் வெற்றிபெற்ற எம்பி இன்னும் நன்றி சொல்லக்கூட ஊருக்குள் வரவில்லை. ஒருமுறை ஓட்டு போட்டு 5 வருடங்கள் கஷ்டப்படாதீர்கள்.” என்றார்.  

 

hh


அந்த இடத்திலேயே ஆக்‌ஷன்!

நாங்குநேரி இடைத்தேர்தலுக்காக தெற்குகாடுவெட்டி கிராமத்தில்  திண்ணைப் பிரச்சாரத்தை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மேற்கொண்டபோது, அங்கு வசிக்கும் மக்கள் “அரசுப் பேருந்து திடீரென்று நிறுத்தப்பட்டுவிட்டது. கடந்த சில நாட்களாக பெரிதும் அவதிப்படுகிறோம். தொடர்ந்து அரசுப் பேருந்தினை இந்தப் பகுதியில் இயக்க வேண்டும்.”என்று கோரிக்கை வைத்தனர். உடனே, தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை செல்போனில் தொடர்புகொண்ட ராஜேந்திரபாலாஜி,  அந்த கிராம மக்களின் கோரிக்கை குறித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து கிராம மக்களும் போக்குவரத்துதுறை அமைச்சரிடம் செல்போனில் பேசினார்கள். நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்து உடனடியாக இயக்க  நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிராம மக்களிடம் போக்குவரத்து துறை அமைச்சர் உறுதியளித்திட, கிராம மக்கள் கைதட்டினார்கள்.  

ஆளும்கட்சி ஆயிற்றே! மக்கள் கேட்டதெல்லாம் உடனே கிடைத்துவிடும்! இதனை,  தேர்தல் நடத்தை விதிமீறல் என்றெல்லாம் ‘சின்னப்புள்ளத்தனமாக’ யாரும் குறை சொல்லவா முடியும்?

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அ.தி.மு.க. கூட்டணி; தே.மு.தி.க.வுக்கு கூடுதல் தொகுதி ஒதுக்கீடு? 

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
ADMK Alliance; Allotment of additional seats for DMDk

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16.03.2024) நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. அதன்படி, அ.தி.மு.க.வுடன், தே.மு.தி.க. இரண்டு கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அ.தி.மு.க, தேமுதிக இடையே மார்ச் 16 ஆம் தேதி 3 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போது, அ.தி.மு.க. கூட்டணியில் 7 மக்களவைத் தொகுதிகளிலும் ஒரு மாநிலங்களவை இடத்துக்கும் போட்டியிட தேமுதிக விருப்பம் தெரிவித்ததாகக் கூறப்பட்டது. அப்போது 4 தொகுதிகள் வரை ஒதுக்க அ.தி.மு.க. சம்மதம் தெரிவித்திருந்திருந்தது.

அதே சமயம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக பா.ம.க. தலைமை நிர்வாகக் குழு கூட்டம், உயர்மட்டக் குழு கூட்டம் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தைலாபுரத்தில் இன்று (18.03.2024) நடைபெற்றது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பா.ம.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், கூட்டணி விவகாரத்தில் திடீர் திருப்பமாக இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ADMK Alliance; Allotment of additional seats for DMDk

இந்நிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் பாமக இடம் பெறாததால், தே.மு.தி.க.விற்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்க அ.தி.மு.க. முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் பா.ம.க. இல்லாததால் தற்போது 6 முதல் 7 மக்களவைத் தொகுதிகளைக் கேட்க உள்ளதாகவும் தேமுதிக சார்பாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாகத் தமிழகத்தின் வட மாவட்டங்களில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் போட்டியிட ஒதுக்கக் கோரும் சில தொகுதிகளில் தே.மு.தி.க.வும் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்ததால் அ.தி.மு.க. - பா.ம.க. - பா.ஜ.க. கூட்டணியை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

நெருங்கும் நாடாளுமன்றத் தேர்தல்; பரப்புரையைத் தொடங்கும் முதல்வர்!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Parliamentary elections approaching The CM mk stalin will start the campaign

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16-03-2024) நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதிகளுடன், புதுவை தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 2 தொகுதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 2 தொகுதி, ஐ.யூ.எம்.எல் - 1 தொகுதி, கொ.ம.தே.க - 1 தொகுதி, ம.தி.மு.க. - 1 தொகுதி, வி.சி.க. - 2 தொகுதி என ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தன. தி.மு.க. தமிழகத்தில் 21 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

இதனையடுத்து தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பாக ராமநாதபுரத்தில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் நவாஸ் கனிக்கே மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக சு. வெங்கடேசன் எம்.பி. மீண்டும் போட்டியிட உள்ளார். திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம் போட்டியிட உள்ளார்.

திருச்சி தொகுதியில் ம.தி.மு.க. வேட்பாளராக துரை வைகோ போட்டியிடவுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூரில் மீண்டும் கே. சுப்பராயன் போட்டியிட உள்ளார். நாகப்பட்டினத்தில் வை. செல்வராஜ் போட்டியிட உள்ளார். நாமக்கல் மக்களவைத் தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் வேட்பாளராக சூரியமூர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் திமுக - காங்கிரஸ் சார்பில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களின் பெயர்களும் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Parliamentary elections approaching The CM mk stalin will start the campaign

இந்நிலையில். திருச்சியில் வரும் 22 ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்க உள்ளார். இதனையடுத்து 23 ஆம் தேதி திருவாரூரில் பரப்புரையை மேற்கொள்ள உள்ளார். அதே சமயம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் மார்ச் 24 ஆம் தேதி தனது பரப்புரையைத் தொடங்கி மார்ச் 31 ஆம் தேதி வரை பல்வேறு இடங்களில் பரப்புரை மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.