ADVERTISEMENT

குதிரை சிலைக்கு போடும் காகித பூ மாலை: ரூ. 2 ஆயிரம் முதல் ரூ. 10 ஆயிரம் வரை

04:05 PM Feb 18, 2018 | rajavel


ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் கிராமத்தில் வில்லுனி ஆற்றங்கரையில் எழுந்தருளியுள்ள பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில் முன்பு ஆசியாவிலேயே மிக உயரமான 33 அடி உயர குதிரை சிலை உள்ளது. இந்த குதிரை சிலை வானில் தாவிச் செல்லும் தோற்றத்தில் காணப்படும். ஒவ்வொரு ஆண்டும் மாசிமகத் திருவிழாவின் போது புதுக்கோட்டை, தஞ்சை, சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி மற்றும் பல மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள். அதனால் சிறப்பு பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.

ADVERTISEMENT

மாசிமகத் திருவிழாவின் சிறப்பு பெரிய குதிரை சிலைக்கு மாலை அணிவிப்பது தான். திருவிழா நாளில் குதிரை சிலையின் உயரத்தில் சுமார் 2 ஆயிரம் காகிதப் பூ மாலைகளை பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்துவார்கள். இந்த நிகழ்ச்சியை காண அதிகமான பக்தர்கள் குவிவார்கள்.
இந்த ஆண்டு மாசிமகத் திருவிழா எதிர்வரும் மார்ச் 1 ந் தேதி முதல் இரண்டு நாட்கள் நடக்கிறது. அதற்காண ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் விழாக் குழுவினர் செய்து வரும் நிலையில் 33 அடி உயர பெரிய குதிரை சிலைக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் காகிதப் பூ மாலைகள் கட்டும் பணியில் கீரமங்கலம், கொத்தமங்கலம், குளமங்கலம், பனங்குளம், மறமடக்கி, திருநா@ர், ஆவணத்தான்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கீரமங்கலத்தில் பல இடங்களில் காகிதப் பூ மாலைகள் கட்டப்பட்டு வருகிறது. அதே போல கொத்தமங்கலத்தில் மாலை கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள துரை கூறும் போது.. மாசிமகம் வரும் முன்பு 2 மாதங்களுக்கு முன்பில் இருந்தே மாலை கட்டும் பணியில் 100 க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் ஈடுபட்டு வருகிறோம். மதுரையில் இருந்து வண்ண காகிதங்கள் வாங்கி வந்து தேவையான அளவில் நறுக்கி மாலையாக கட்டப்படும். ஒரு மாலை குறைந்தது ரூ. 2 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ. 10 ஆயிரம் வரை விற்பனை ஆகிறது. முன்னதாக ஆர்டர் கொடுத்தவர்களுக்கே இப்பொது மாலை கட்டி வருகிறோம் உடனடியாக மாலை வேண்டும் என்று கேட்டால் கிடைக்காது. குதிரை சிலைக்கு மாலை அணிவிக்கும் அழகை காணவே தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள். அதனால் ஒவ்வொரு ஆண்டும் புதிய மாடல்களில் மாலைகள் கட்டப்படுகிறது என்றனர். இந்த ஆண்டு சுமார் 2 ஆயிரம் மாலைகளுக்கு மேல் குதிரை சிலைக்கு அணிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பகத்சிங்

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT