Advertisment

‘ஒரே நாளில் ரூ.180 கோடி வருவாய்’- பதிவுத்துறை

'Rs. 180 crore revenue in one day only on October 18' - Registration Department

அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் சுபமுகூர்த்த தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப் பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் நேற்று ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகத்திலும் கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்பட்டன. இதனால் நேற்று மட்டும் ஒரே நாளில் ரூ.180 கோடி வருவாய் ஈட்டி பதிவுத்துறை சாதனை படைத்துள்ளது.

Advertisment

மேலும் சுபமுகூர்த்த தினமாக கருதப்படும் ஐப்பசி மாதத்தின் முதல் வெள்ளிக் கிழமையான நாளையும் (20.10.2023) அதிகளவில் பத்திரப் பதிவுகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதால் நாளையும் கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்பட உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்களும், அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 சாதாரன டோக்கன்கள்களோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12தட்கல் முன்பதிவு டோக்கன்களுக்கு கூடுதலாக நான்கு தட்கல் முன்பதிவு டோக்கன்கள்களும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்படும் என பதிவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

Advertisment

registration
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe